பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவளத்தான்் 123

கைவண்மையும் உடைய இவன் முன்ளுேன் நலங்கிள்ளியின் நற்பண்பு எங்கே! இவன் இழிகுணம் எங்கே இவனே அவன் தம்பியென எவ்வாறு கொள்வது? உண்மையில், இவன் அவளுேடு பிறந்தவனுகான் ; இவன் பிறப்பில் யாதோ ஐயம் உளது ; இவ்வாறெல்லாம் எண்ணி வருந் தினர் புலவர் ; எண்ணியதோடு கின்ருால்லர்; சினம் மிகுதி யால், அவர் எண்ணம் சொல்லுருப் பெற்று விட்டது.

கேட்டான் மாவளத்தான்் ; இதற்குள்ளாகவே, புலவர் தவறிலர் என்பதையும் அறிந்து கொண்டான் ; அதனல், புலவர் கூறும் வன்சொற்கள், அவனுக்குச் சினத்தை மூட் டிற்றில ; மாருக, அவன் தலையை வணங்கச் செய்தன; தான்் செய்த பிழைக்கு வருங்கிளுன் ; புலவரை வட்டால் எறிந்ததை எண்ணி எண்ணித் துயர் உற்ருன் ; மாவளத் தான்் நாணம், புலவர்க்குப் பெரு மகிழ்ச்சி அளித்தது ; வட்டு மறைந்திருந்தது தம்மிடத்தில்; அதனல் தவறு தம் முடையதே தவறு செய்த தம்மை, மாவளத்தான்் எறி தலில் தவறு இல்லை; அவன் பால் தவறு இல்லையாகவும், அவனப் பழித்தது, தாம் செய்த மற்றொரு பெரும் பிழை யாம் ; இவ்வாறு தவறுமேல் தவறுசெய்தோர் தாமாகவும், தான்் தவறு செய்யாத வழியும், தவறு செய்தான்்போல் தாம் கூறிய வன்சொற்களைக் கேட்டும் சினம் கொள்ளாது, மாருகப் புலவர் நோவன செய்துவிட்டோமே என்று எண் னிய எண்ணத்தால், நாணித் தலை வணங்கி கின்ற மாவளத் தான்் பேருள்ளம்கண்டு பெரிதும் வியந்தார்; செவிகைப்பச் சொற்பொறுக்கா வேந்தரே உலகில் மிகப் பலராவர்; ஆனால், இவனுே, பிறர் கூறிய பழிகளையும் பொறுக்கும் பண்பும் உடையனவன் ; இக்குணம், இவனுக்கு, இவன் பிறந்த குடிதந்த பெரும் பண்பு; இவன் குடி வந்தார், தமக்குப் பிழைபுரிந்தாரையும் பொறுக்கும் பேருள்ளம் படைத்தோராவர்; அவர் குடிவழி வந்து, அப் பண்பு மாருது மாண் புற்ற இவன், இவர்கட்குரிய காவிரியாறு, கொண்டுவந்து குவிக்கும் மணலினும் பல்லாண்டு வாழ்ந்து வளம் பெருகுவாளுக' என்று வாழ்த்தி வழிக்கொண்டார்.