பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உo. முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி, நலம் மிகப்

படைத்த வளமிகு நாடாண்ட சோழனவன்; அவன் நாட்டு உழவர், தாம் அமத்துப்போட்ட நெற் சூட்டினைத் தொகுக் குங் கால், அவற்றின் இடையே மயில்கள் உதிர்த்த பீலி கள், பிரிக்கலாகாவாறு மண்டிக் கிடப்பதால், அவற்றையும் சேர்த்தே தொகுப்பர் ; அத்துணை வளம் உடையது அவன் நாடு; மீனும், கள்ளும் முதலாம் உணவுப் பொருளினும் குறையுடையதன்று அது ; இத்தகைய வளமெலாம் பெறு தற்கேற்ற நீர்வளத்தான்ும் கிறைந்தது அந் நாடு; முடித் தலைக்கோ, வளம் நிறை நாடாண்டதோடு, பெருவீரனு மாவன்; புலித்தோலால் ஆய மார்புக் கவசம், தன் இணைப் பற்று அழித்தொழியுமாறு பகைவர்விட்ட அம்புற்று ஆய புண் பல பெற்றப் புகழ் நிறைந்து உயர்ந்தது அவன் மார்பு; அவன் ஊர்ந்து செல்லும் யானேயும், கூற்றுவன் போலும் கொலேத் தொழில் வல்லது; இம் முடித்தலைக்கோ, தன் காலத்தே, கருவூரைத் தலைநகராக் கொண்ட சேரநா டாண்டிருந்த அந்துவஞ் சேரல் இரும்பொறையொடு பகை கொண்டு, அவனுக்குரிய கருவூரை முற்றுகையிட்டான்; முற்றியிருக்கும் காலத்தே, ஒரு நாள், இவன் ஊர்ந்து செல்லும் யானே மதம் கொண்டு விட்டது; எதிர்ப்பட்ட பொருள்களை அழித்தல்லது மீளா வன்மை வாய்ந்த சுரு மீன் போலும் வாட் போர் வல்ல வீரர், சூழ்ந்து கிற்கக், கடலிடைச் செல்லும் கலம் போலவும், விண்மீன்களுக் கிடையே விளங்கும் வெண் மதி போலவும், பாகர்க்கும் அடங்காது, ஆற்றல் கொண்டு திரியத் தொடங்கிவிட்டது : இறுதியில், தம் பாசறையின் நீங்கிப் பகைவர் பாசறை பையும் நெருங்கிவிட்டது ; இந்தக் காட்சியைக் கருவூர் வேண் மாடத்துக்கண், அந்துவஞ் சோல் இரும்பொறை பொடு உடன் இருந்த புலவர், உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் கண்டுவிட்டார்; தனித்துத் தன் நிலை தவற வந்திருக்கும் அவனைச் சோர் படை வீரர் சூழ்ந்து அழிப்