பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி

வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்ற பெயர்

உடைமையான், இவன், வேற்படையால் விறல் பெற்றவ குவன் என்பது தெளிவாம்; இவன் நாடாண்டிருந்த காலத்தே, சேர நாட்டில், இமயவரம்பன் நெடுஞ் சோலா தன் எனவும், குடவர் கோமான் நெடுஞ் சோலாதன் என வும், அழைக்கப் பெறும் குடக்கோ நெடுஞ் சேரலாதன் நாடாண்டிருந்தான்்; தமிழரசர்கள்பால் சிலவும் இயல்பிற் கேற்பவே, இவ்விருவரும் பகைகொண்டு வாழ்ந்தனர்; இறுதியில் சோழநாட்டில், திருப்போர்ப் புறம் எனும் இடத்தே இருவர் படையும் ஒன்றை யொன்று எதிர்த்துக் கடும்போர் ஆற்றின; இருவரும் பெரு வேந்தராவர் ஆத லாலும், இருவர் படையும், பல்வேறு மொழி வழங்கும் மக் களைக் கொண்ட பெரும் படையாகவே காணப்பட்டமை யாலும், போர் மிகமிகக் கொடுமையாக நடைபெற்றது ; இருதிறப் படையிலும் பிழைத்தார் ஒருவரும் இலராம் நிலையில் போர் முடிந்தது ; அரசர் இருவரும் ஆண்டே அழிந்தனர்; இவ்வாறு, களன.ழிய அழிந்த காவலர்கிலே குறித்துக் கண்ணிர்விட்டுக் கலங்கியுள்ளனர் பெரும்புலவர் இருவர்.

' களம் புகுந்த களிறுகள் எண்ணித் தொலையா; அவை அத்தனையும், அம்பால் அடியுண்டு, இனி, செய்யக் கடவ கடமையின்றிக் களத்தே மடிந்தன ; வெற்றிப் புக மும், விரைந்த செலவும் உடைய குதிரைகள் எல்லாம், மறம் மிக்க தம் மேலாட்களுடனே, ஆங்கே அழிந்து ஒழிந் தன ; தேர் ஏறி வந்த பெரு வீரரெல்லாம், ஒரு சேர மடிங் தனர்; வார்கொண்டு வலிக்கப்பெற்று, மயிர்சீவாத் தோல் போர்க்கப் பெற்ற போர் முரசுகள், முழக்குவாரின் றிக் கொன்னே கெட்டன : மார்பில் வேலேற்று வேந்தர் இரு வரும் வீழ்ந்து மடிந்தனர்; அந்தோ இளைய மகளிர், ஆம் பல் தண்டால் ஆக்கிய அழகிய வளையணிந்து, அவலே வாயில் அடக்கிப் புனல் பாய்ந்து ஆடி மகிழ்தற்காம் பெரு