பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i2 பாண்டியர்

'கலன் நசைஇக் கொட்கும்

கண்மா முடவர் ஒடுக்கம் ஒற்றி, வயக் களிறு பார்க்கும் வயப்புலி போலத் துஞ்சாக் கண்ணர் , அஞ்சாக் கொள்கையர் : அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் ; செறிந்த நூல்வழிப் பிழையா நுணங்கு நுண்தேர்ச்சி ஊர் காப்பாளர் , ஊக்கருங் கணையினர் ; தேர்வழங்கு தெருவின் நீர்திரண்டு ஒழுக மழையமைங் துற்ற அாைநாள் அமயமும் அசைவிலர் எழுந்து நயம்வந்து வழங்கலின்.”

(மதுாைக்காஞ்சி: சுசக-இ0)

இவ்வாறு ஆட்சிச் சிறப்பாலும், அரும்பொருள் உடைமையாலும் புகழ்பெற்ற மதுரைப் பேரூர், புலவர் பலர் வாழ்வாலும் சிறப்புடையதாகும் ; மதுரை, சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த தனிச் சிறப்புடையதாகலின், ஆண்டு நூற்றிற்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் கூடித் தமிழாராய்ந்து வந்தனர் ; உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்த ஒண்திங் தமிழின் துறை,’ எனத் திருக்

கோவையார் கூறுவதும் காண்க.

மதுரையை அடுத்துச் சிறப்புடைய பாண்டி நாட்டுப் பேரூர் கொற்கை. "முத்துடைத்து,” என்ற பெருமை யைப் பாண்டி நாட்டிற்குத் தேடித்தந்த சிறப்புடையது கொற்கை; கொற்கை, செல்வம் கொழிக்கும் சிறப்புடைத் தாதல் அறிந்த பாண்டியர், அந் நகர்க்காவலை அரிதின் பேணிவந்தனர் ; கொற்கைத் துறையும், அத்துறை முத் தும் உரோமர் முதலாம் மேனுட்டுமக்கள் பலராலும் பாராட்டப் பெற்றுள்ளன ; கடலுள் மூழ்கி முத்தெடுக் கும் பணியினப் பாண்டியர் கம் காவற் கைதிகளைக்கொண் ம்ெ மேற்கொண்டு வந்தனர் எனக் கூறுவர் மேனுட்டு அறிஞர்கள் ; "பாண்டியர் அறம் பிறழாது காக்கும் கொற்கைத் துறைமுத்து,” என்மம், "திரை கொணர்ச் தெரதுக்கும் கொற்கைத்துறை முத்துக்கள், ஆண்டு வரும்

குதிரைகளின் கால்களைச் சிதைத்து மேற்செல்லவொட்