பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாண்டியர்

றிக் குலைந்துளது என அறிந்த சிற்றரசன், பகைவர் படை எங்கேரத்தில் உட்புகுந்துவிடுமோ என்ற அச்சத்தால் உறக்கம் ஒழித்து இருப்பன் எனப் போர்ப்பண்புகளையும் அவர் கூறியுள்ளமை யுணர்க.

'முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பிரெழுந்து

மனைபாழ் பட்ட மரைசேர் மன்றத்துப் பணைத்தாள் யானை பரூஉப்புறம் உரிஞ்சச் செதுகாழ் சாய்ந்த முதுகாற் பொதியில்,

வென்வேல், அண்ணல் யானை அடுபோர் வேந்தர் ஒருங்ககப் படுத்த முரவுவாய் ஞாயில் ஒரெயில் மன்னன் போலத்

துயில் துறந்து.' (அகம்: கூஎங்)

எனதி நெடுங்கண்ணன், தன் காலத்துப் பார்ப்பனர், தண்டு கமண்டலம் தாங்கி, உணணுவிரதம் மேற்கொண்டு வாழும் உயரிய வாழ்வினராவா ; அவர்க்கு எழுதாக் கிளவியாம வேதம் ஒதுதல் உரிய தொழிலாம் எனக் கூறி, அவரையும அவர் தொழிலேயும் பாராட்டியுள்ளார்: போர்ப்பன மகனே பார்ப்பன மகனே !

செம்பூ முருக்கின் கல்சார் களைந்து தண்டொடு பிடித்த தாழ்க மண் டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே !

எழுதாக் கற்பின் நின்சொல்.” (குறுக் கடுக)