பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாலங்கானத்துச்....நெடுஞ்செழியன் 67

களில் எல்லாம், உணவு குறித்து எடுக்கும் எரிக்குப் பதி லாகப் பகைவர் எழுப்பிய தீ கொழுந்துவிட்டு எரியும் கொடுமைகளையும் கண்டு வந்து, செழியனேக் கண்டு, * செழிய! நான் வருங்கால், சின்னல் ப்ாழான பகைவர் நாட்டுள் புகுந்து வந்தேன்; அம்மம்ம! ஆண்டு யான் கண்ட காட்சிகள் கொடிது கொடிது ' என்று கூறத் தொடங்கி, ஆங்குத் தாம் கண்ட காட்சிகள் அனைத்தையும் அவன் கண்முன் கொணர்ந்து காட்டுவார்போல் விளங்கக் கூறிஞர் :

“ எழுவுறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்,

நோா எழுவர் அடிப்படக் கடந்த

ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிதே. (அகம்: உ0க)

' வெளிறில் நோன்காழ்ப் பனை நிலை முனை இக்

களிறு படிந்து உண்டெனக் கலங்கிய துறையும், கார்நறுங் கடம்பின் பாசிலேத் தெரியல் சூர்ாவை முருகன் சுற்றத் தன்னகின் கடர்சல் அன்பின் கொடுவில் கூளியர் கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில் கொள்பதம் ஒழிய வீசிய புலனும், வடிவில் வியம் பாய்தலின், ஊர்தொறும் கடிமரம் துளங்கிய காவும், நெடுநகர் வினைபுனை நல்லில் வெவ்வளி இளைப்பக் கனே எரி உரறிய மருங்கும் நோக்கி,

ஆலங் கானத்து அமர்கடங் திட்ட

கால முன்பகிற் கண்டெனன் வருவல்.’ (புறம்: உங்)

களம் நோக்கிச் செல்லும் செழியன் காட்சியைக் கண்டு களித்த புலவர் இடைக்குன்றார் கிழார், அவன் களம் வென்று தேர் ஊர்ந்து வரும் காட்சியைக் கானும் பேறும் உடையாாயினர். வென்று வரும் தேரையும் அதில் வீற்றிருக்கும் செழியனேயும் கண்ட புலவர்க்குப் பெரு மகிழ்ச்சி உண்டாயிற்று ; அப்போதைய அவன் தோற்றம்