பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

' குடுமி" (புறம்: , சு, கடி), குசிமிக் கோமான் ” (புறம்: ச), பல்சாலே முதுகுடுமி" (மதுரைக்காஞ்சி : எடுக), பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி ' (வேள்விக்

குடிச் செப்பேடு) என்றெல்லாம் அழைக்கப்பெறும் இப் பாண்டியன் இயற்பெயர் குடுமி என்பதாம்; இவன், வேள்வி பல ஆற்றிய விழுச் சிறப்பும், விளங்கிய பெருமை யும் உடையாளுதல் அறிந்த ஆன்ருேர், இவனைப் பல் யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என அழைப்பாராயினர்;

"எங்கோ வாழிய குடுமி ! தங்கோச்

செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர் பஃறுளி மணலினும் பலவே.”

(புறம் : க.)

இவ் வாழ்த்து, முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டிய புலவர்களுள் ஒருவராய நெட்டிமையார், அவனே வாழ்த்திய வாழ்த்து; இதில், முந்நீர் விழவின் நெடியோனுக்குரிய பஃறுளி ஆற்று மணலிலும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தினமையால், முதுகுடுமி, முந்நீர் விழவின் நெடி யோனுய சிலந்தரு திருவிற் பாண்டியன் வழிவந்தவனுவன்; ': பஃறுளி ஆற்றுடன் பல்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங் கடல் கொள் ” வதற்கு முற்பட்டதாய மிகப் பழைய காலத்தே வாழ்ந்தவளுவன் என்பன விளங் கித் தோன் மும், விற்க, கலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனேப் பாராட்டிய புலவர் மாங்குடிமருகளுர், மதுரைக்கர் ஞ்சியில், நெடுஞ்செழியன், பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதியின் வழிவந்த சிறப்புடையோனுவன் எனக் கூறிப் பாராட்டியுள்ளமையான், முதுகுடுமி, அந் நெடுஞ்செழியனுக்கு முற்பட்ட முதுமையுடையோனுவன் என்பதும் விளங்கித் தோன்றும் பல்சாலை முதுகுடுமி வின் நல்வேள்வித் துறைபோகிய ' (மதுாைக்: எடுக-சுo).