பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சேரர்

சென்றார் ; ஆங்குப் பொன்னும் பொருளும், நெல்லும் மணியும் மண்டிக்கிடப்பக் கண்டு ஒன்றும் புரியாராய் கின்றார்; அப்போது அவர் மனேவியார், இவையெல்லாம் குடக்கோ இளஞ்சோல் இரும்பொறையின் கொடைப் பொருள்களாம்; அவன் நினக்கு ஒன்றும் அறியான்போல் காட்டி, நீ அறியாவாறு முப்பத்தீராயிரம் காணமும் கொடுத்து, ஊரும் மனேயும் வள மிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வாப் பரப்பி, எண்ணற்காகா அருங்கல வெறுக்கையும் அளித்துள்ளான்” என்று அறிவித்தார்.

இளஞ்சேரலின் பெருஞ்செயல் அறிந்த புலவர் பெருங்குன்றார்கிழார், அவனே நேரிற் கண்டு பாராட்ட விரும்பினர்; விரைந்த சேர நாடடைந்தார்; அவன் பிடும் பெருமையும், பாருளோர் எல்லாம் அறியும் வண்ணம் பாக்கள் பல பாடிப் பாராட்டிஞர் ; வெற்றியும், கொடை யும் விளங்கப் பாடினர் : அன்பும், அறிவும், ஆற்றலும் விளங்க வாழ்த்தி வணங்கினர் :

'நல்லிசை நிலைஇய நனந்தலே உலகத்து

இல்லோர் புன்கண் ாே நல்கும் நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் பாடுநர் புரவலன்.” (பதிற்று அசு)

என, அவன் கொடைச் சிறப்பினையும்,

'ஈரம் உடைமையின் நீரோர் அனையை,

அளப்பருமையின், இருவிசும்பு அனையை: கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை, பன்மீன் காப்பண் திங்கள் போலப் பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலே.”

- (பதிற்று கo) என, அவன் அன்பு, அறிவு, அருள், சுற்றம் போற்றலாம் பண்பு ஆகியவற்றையும் பாராட்டிப் பரவிஞர் ; இவ்வாறு புலவர் போற்றும் புகழுடையோனுய இளஞ்சோல் இரும் பொறை, பதினருண்டு பாருளோர் போற்ற வீற்றிருந்து 'விழுப்புகழ் பெற்ருன்.