பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சேரர்

பொருள் அளித்துப் பேணியது, பெருஞ்சோறளித்தது ஆகிய கிகழ்ச்சிகள் புலவர் பாராட்டிற்குரியவாயின.

தலைவன், கின்னே உடன்கொண்டு சென்று மணக்கத் துணிந்தனன். ஆகவே, இனி, நீ வருத்துவதொழிந்து. பிறர் நாட்டினே வென்று கன் காட்டினே விரிவாக்கிய உதியஞ் சோலாதனேப் பாடிச் செல்லும் பரிசிலர் பொருள் பெற்று மகிழுமாறு மகிழ்வாயாக என, அவன் காட்டை விரிவாக்கிய கிகழ்ச்சியையும், பரிசிலர்க்குப் பொருள் அளிக்கும் சிறப்பையும் பாராட்டியுள்ளமை உணர்க.

'நாடுகண் அகற்றிய உதியஞ் சோற்

பாடிச் சென்ற பரிசிலர் போல * உவவினி வாழி !’ (அகம் : சுடு)

உதியன் பெருஞ்சோறு அளித்த சிகழ்ச்சியைப் பாராட்டிய புலவர்கள், முரஞ்சியூர் முடிநாகராயரும், இளங் கோவடிகளும், மாமூலனரும், கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமானுமாவர். இவருள் முன்னேயர் இருவரும் உதியன் சேரலாதன், பாண்டவர் ஐவரும் கெளாவர் நாற்றுவரும் மேற்கொண்ட பாதப் போரில், அப் போர் முடியுங்காறும் இருகிறப்படையினர்க்கும் சோறளித்துப் புரக்கான் எனக் கூறுகின்றனர் ; இறந்து துறக்கம்புக்க, பெரும்புகழ் நிறைந்த தன் முன்னேரை வழிபடல் கருதிய உதியஞ் சேரலாதன் அவர்க்குப் பெருஞ்சோறு படைத்த காலத்தே அவன் இடும் அப்பலிச் சோற்றை உண்ணவேண்டி ஆண்டுக்கூடிய பேய்கள் எண்ணற்றனவாம் என்று மாமூல ஞரும், கொடுத்தல் தன் பிறவிக்கடன் என்ற நல் உள்ளம் வாய்க்கப்பெற்ற உதியன், வருவார்க்கு வழங்கல் குறித்து, பல்லான்குன்று எலும் மலேயிடத்து கிழலைச் சேர்ந்து வாழும் ஆனிரை பல கிறைந்த குழுமூர் என்னுமிடத்தே, சோறு ஆக்க எடுத்த அட்டிற்சாலையில், மலையினின் ஆறும் விழும் அருவியொலிபோலும் பேரொலி கிலவும் என்று கோட்டம்பலத்துத் துஞ்சிய சோமானும் கூறி யுளளனா :