பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. செல்வக் கடுங்கோ வாழியாதன்

தகர்ே எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை எனும் தவமகனப் பெற்ற பெறற்கரும் பேறுடையான் செல்வக் கடுங்கே வாழியாதன், செல்வக் கடுங்கோ வாழியாதனத் தந்த கங்தை யார் தாய் யாச்? என்பதை அறிதல் அருமை யுடைத்தாம்; அவன் கங்தை இன்ஞன், காய் இன்னுள் என்பதை அறிவிக்கும் பதிற்றுப்பத்து ஏழாம் பத்தின் பதிகம் தெளிவின்றியுளது செல்வக் கடுங்கோ வாழியா தன், இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன் இளைய மனேவி யோடு உடன் பிறந்தாளும், வேளாவிக் கோமான் பதுமன் என்பான் மகளும் ஆய ஒருத்தியை மனேவியாகப் பெற்று மாண்புற்முன்; செல்வக் கடுங்கோவைப் பாடிய புலவர்கள் கபிலரும், குன்றுகண்டாலி யாதனுருமாவர் ; இவர்கள் இரு வரும், செல்வக் கடுங்கோபால் தாம் கண்ட அருங் குணங் கள் பலவற்ருேடு, அவன் வெற்றிச் செயல்களையும் பொது வகையாற் கூறியுள்ளனரேயல்லால், அவற்றை விளங்க உாைததாலலா.

செல்வக் கடுங்கோ வாழியாதன் அரியணை ஏறிய காலத்தே, அவன் ஆட்சிக்குட்பட்ட ரா,ே அளவில் சுருங்கி யிருந்தது ; சுருங்கிய அங்காட்டை ஆள, அவன் உள்ளம் நாணிற்று இந்நாடு அனைவர்க்கும் பொது ' என்ற சொல் எட்டியெனக் கசந்தது அவனுக்கு ; உலக அரசர் எல்லாம் தன் ஏவல் வழி நிற்கவேண்டும் ; உலகனேத்தும் தன் ஒரு குடைக்கீழ் வால்வேண்டும் என விரும்பினுன் , விரும்பியதோடு கின் முனல்லன்; ' உள்ளம் இல்லாதவர் எய்தார் உலகத்து, வள்ளியம் என்னும் செருக்கு” எனும் உண்மையை அறிவான் அவன் ; இடம் சிறிது, இடம் சிறிது என்ற எண்ணம் அவன் உள்ளிருந்து ஊக்கிக் கொண்டே விருந்தது ; அதனுல், எண்ணியது எண்ணி யாங்கு முடிக்கும் திண்ணியனுயிஞன் கடுங்கோ வாழியா தன். கடுங்கோபால் தாம் கண்ட இப் பண்புகளைப் புலவர் கபிலர், கவினுறப் பாடிக் காட்டியுள்ளார் :