பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. சேரர்

வேண்டிய அவன், வெண்சாமரையினே எடுத்து, அவர், வழிநடை வருத்தத்தால் உண்டாம் வெப்பம் ஒழிந்து இனிது உறங்குமாறு, அவர் எழும்வரை தான்ே வீசி கின்ருன் உறங்கி எழுந்த புலவர், தாம் செய்த பெரும் பிழையினையும், அதுகண்டு ஒறுக்க வேண்டிய அரசன், அன்புகொண்டு கவரி வீசி நிற்பதையும் கண்டார்; அரசன் பால் அவர்க்குப் பெருமதிப்பு உண்டாயிற்று ; அரசனின் தமிழ்ப்பற்று அவர்க்குப் புலகுயிற்று ; உடனே “அரசே! கின் மு.பசுகட்டில் எறிய என்னே இரு தண்டங்களாக வெட்டி வீழ்த்தாதுவிட்ட அச்செயல் ஒன்றே சாலும் கின் தமிழ்ப்பற்றினை விளக்க ; நீ அம்மட்டோடு கின்ருயல்லை; யான் உறங்கி எழுங்காறும் கவரிகொண்டன்ருே வீசி வின் றனே; சின் பெருமையினே என்னெனப் புகழ்வேன்! என்னே நின் தமிழ்ப்பற்று இவ்வுலகத்தே, புகழ் தரும் செயல் புரிந்தார்க்கல்லது, உயர்நிலை உலகமாம் உம்பர் உலகத்தே இடம் கிடைத்தல் இல்லை எனச் சான்ருேர் கூறுவன கேட்டதன் பயனே, செயற்கரும் இச்செயற்குக் காரணம்!” என வியந்து பாராட்டி மகிழ்ந்தார்.

ஒரு புலவர்க்கு அரசுகட்டிலும், மற்றொரு புலவர்க்கு முரசுதட்டிலும் உரிமையாக்கி உயர்ந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் பெருமைதான்் என்னே !

மாசற விசித்த வார்புறு வள்பின் மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை ஒலி நெடும் பீலி ஒண்பொறி மணித்தார் பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டி குருதி வேட்கை உருகெழு முரசம் மண்ணி வாரா அளவை எண்ணெய் துரை முகந்தன்ன மென்பூஞ் சேக்கை அறியா தேறிய என்னைத் தெறுவா இருபாற் படுக்கும் நின் வாள்வாய் ஒழித்ததை அது உம் சாலும் நல்தமிழ் முழுது அறிதல் : அதளுெடும் அமையாது, அணுக வந்துகின் மதனுடை முழவுத்தோள் ஒச்சித் தண்ணென