பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 திரையன் கொண்டு அவனைக் கொன்று வீழ்த்தினர்; வீழ்ந்த அவன், பிறர் எவரும் உடுக்க எண்ணுவாறு கங்கையான ஆடை யினேயே அணிந்திருத்தல் கண்டு, அவன்பால் பொரு ளின்மை அறிந்து, அப் பார்ப்பான் குருதிபடிந்து கறை பட்ட தம் அம்போடு, அனேவரையும் அழைத்துக் கொண்டு அப்பாற் சென்றனர்; என்னே கொடுமை ! " தாது ஒய் பார்ப்பான் மடி வெள் ஒல படை யுடைக் கையர், வரு தொடர் நோக்கி உண்ணு மருங்குல் இன்னேன் கையது பொன்ன குதலும் உண்டு எனக் கொன்னே தடித்துடன் வீழ்த்த கடுங்கண் மழவர், திறனில் சிதாஅர் வறுமை நோக்கிச் செங்கோ லம்பினர் கைக்கொடியாப் பெயர்.” (அகம்: க.க.எ) இவ்வாறு, மழவர் வில்லேர் உழவினராய் வாழ்ந்தமை யின், அவர்கள், தம் குலத்து இளைய வீரர்கட்கு விற்போர், வாட்போர் முதலாயினவற்றில் பயிற்சி அளித்து, அவ் வாறு பயின்று சிறந்தாரை அரங்கேற்றுவிக்கும் விழாவினை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடி வருவாராயினர்; அவ்வாறு அவர்கள் கொண்டாடிய விழா, பூந்தொடை விழா எனப் புலவர்களால் பாராட்டப் பெற்றுளது.

  • மழவர்

பூங் தொடை விழவின் தலைநாள் அன்ன தருமணல் ஞெமிரிய திருசகர் முற்றம். (அகம்: க.அஎ) மழவர், இவ்வாறு வீாருட் சிறந்தாராய் விளங்குதல் கண்ட தமிழ் நாட்டு அரசர்கள், அவரைத் கம் படையுட் சேர்த்துப் பணிகொண்டு பெருமை புற்றனர்; ஒரு சில அரசர், அவர்க்குப் புகலிடம் அளித்துப் புரத்கல் பொருக் தாது, அவரை அழித்து அடக்குதலே அறமாம் எனக் கொண்டனர் ; - - - -