பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திரையன் புவி தாக்கக் கண்ட பிடி, காட்டுவாழ் யானைகள் அனைத் தையும் ஒன்று கூட்டி எழுப்பும் கூப்பீட்டொலியும், கிளேக்குக்கிளை தாவுங்கால் கைப்பிடி தளர்ந்த தன் குட்டி ஆழ்ந்த முழையிலே வீழ்ச்சிறப்பக் கண்ட மந்தி, தம் இனத் தோடும் கூடி எழுப்பும் இரங்கற் பேரொலியும், குரங்கும் ஏறமாட்டாக் குன்றின் உச்சியில் உள்ள தேனிருலே ஏணி கொண்டு எறிப்பெற்ற கானவர் வெற்றிக் களிப்பும், அழித் தற் கரிய பகைவர்தம் அரண்களே அழித்துப் பெரும் பொருள் கொணர்ந்த கானவர், ஆர்வமிகுதியால் எழுப்பும் ஆரவாரமும், குறக்குல மகளிர் ஆடும் குரவைக் கூத்திடை எழுப்பும் பாட்டொலியும், கல்மீதும், கற்பாறைகள் மீதும் ஒடிவரும் ஆறுகள், மலை முழைஞ்சுகளில் வீழ்வதால் எழும் இடையருப் பேரொலியும், யானேயைப் பழக்குவார், ‘அப்புது, அப்புது, ஆது, ஆது, ஐ, ஐ’ என்பன போலும் மொழிகளேக் கற்றுத்தரும் ஆரவாரமும், மகளிர், தட்டை களைப் புடைப்பதால், புனந்தொறும் எழும் கிளிகடி யொலி யும், குறிஞ்சி கிலக்குறவரும், முல்லைகிலக் கோவலரும் ஏற்றையும், எருதையும் பொரவிட்டு, வெற்றி கண்டு மகிழும் விழா வொலியும், சின்று எஞ்சிய பலாப்பழத்தி .ணின்றும் கொட்டைகளை மட்டும் கொள்ள விரும்பும் குறக்குடிச் சிறுவர்கள், அப் பழங்களேக் கீழிட்டுக் கன்று களைப் பிணித்துக் கடாவிடும் குரலொலியும், மகளிர் கினை கொய்யுங்கால் பாடும் வள்ளேப்பாட்டொலியும், மஞ் சளேயும், சேம்பையும் பன்றிதள் தோண்டி உண்ணுவாறு தடுக்க,எழுப்பும் பறையொலியும், ஆய பல்வேறு ஒலிகள் எதிச்ொலித்து ஒலிக்க, எக் காலத்தும் கேட்கலாம் ன்னரின், அந் நாட்டின் வளத்தின விளங்க வேறு உரைத்தலும் வேண்டுமோ? - நன்னனுக்குரிய பல்குன்றக் கோட்டத்தில், தவிரம் எனும் பெயருடைய மலையொன்று உண்டு; அம்மலை, நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுக்கிறல் பேரிசை நவிரம்” எனவும், வளம் பிழைப்பறியாது வாய்வளம் பழுசிக் கழைவளர் கவிாம்” எனவும் புலவரால் பாராட்டப் பெறு