பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன்சேய் நன்னன் 17 னன், ஒரு பேரரசின் கீழ்ப்பணியாற்றிய பல்லோருள் ஒரு வளவன் என்பதை ஒப்புக்கொள்ளார்; அவன் நாடும், அவனும் அத்துணேச் சிறந்து விளங்கியுள்ளனர்; கன்னன் ஏற்றை என்ற அகப்பாட்டான், சோன் படை முதலி களுள் ஒருவகை உணரப்படும் நன்னன் கொண்கானத்து நன்னனு மாகான்; நன்னன் சேய் நன்னனும் ஆகான்; நன்னன் எனும் பெயர்பூண்ட பிறனுெருவனே ஆவன்; 'நன்னன் உதியன், அருங்கடிப்பாழி’ என்ற தொடரால், சோரோடு தொடர்புடையணுக விளங்கும் நன்னன், அச் சோரோடு பகைகொண்ட கொண்கானத்து நன்னனே யாவன்; சோரோடு உறவுடையார், அச்சோசைப் பகைத்து வாழ்ந்தனர் என்பதற்குச் சங்கநூல்களுள் எத்தனையோ சான்றுகள் உள : சோர்க்குரிய பனந்தார் பூண்டு சேர்க்கு உறவுடையனுய தகடூர் அதியமான் நெடுமான் அஞ்சி, பெருஞ்சேரல் இரும்பொறையொடு பகைத்துப் போரிட்டு உயிர் இழந்தான்; குட்டுவன் எனும் பெயர் உடைமையால், சேரமரபினன் என உணரப்படும் திருக் குட்டுவன் என்பான், சோர்க்குப் பகைவராய சோழன் பன்டயில் பணியாற்றிச் சோழிய் எனுதி திருக்குட்டுவன் எனும் பெயர் கொண்டு வாழ்ந்தான் என்ற வரலாறுகளே நோக்குக. பல்குன்றக் கோட்டம், பெரியனவும், சிறியனவுமாய மலைகள் பலவற்றைக் கொண்ட ஒரு மலைநாடு; ஆகவே, அந்நாடு மலைவளம் பலவும் மலியக் கொண்டிருந்தது; மலை யும், காடும் மண்டிக்கிடக்கும் அக் குறிஞ்சி கிலத்தே, கூத்தர்கொண்டு செல்லும் இசைக்கருவிகளினின்றும் எழும் இன்னிசைபோலும் அருவியொலியும், யானைய்ைப் பிடிப்பார் எழுப்பும் பேரொலியும், எய்ப்பன்றியால் தாக் குண்ட கானவர் எழுப்பும் அழுகை யொலியும், தம் கணவர் மார்பில் புலிபாய்ந்து தாக்கிய புண்ணேப் பாடிப் போக்கும் கொடிச்சியர் பாடல் ஒலியும், வேங்கை மலர் கொய்யும் மகளிர் எழுப்பும் புலிபுலிப் பூசலும், சூலுற்ற தனக்கு வேண்டும் தழை தேடிச் சென்ற தன் களிற்றினைப் தி.--2 -