பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. நன்னன் வேண்மான் நன்னன் வேண்மான் எனும் இவ் வேளிர் குலத்தலே வன், புலவர் பெருமக்கள் பதின்மர், இருபதுக்கு மேற் பட்ட இடங்களில் விரித்துரைக்கவல்ல வரலாற்றுப் பெருமை யுடையனவன்; இவன் வரலாற்றினே அறிய முற் பட்டார் பலராயினும், இவன் வரலாறு இதுவே என வரை யறுத்துக் கூறினர் ஒருவரும் இலர்; இவன் வரலாறு குறித்த ஒருமித்த கருத்தினை ஆராய்ச்சியாளர் இதுகாறும் காண்டனால்லர்; அக்கால அரசரோடும், அரசியலோடும் அவன் கொண்டிருந்த தொடர்பு அத்துணை விரிவுடையது. நன்னன் வேண்மான் இருந்து ஆண்டநாடு கொண்காணம் எனப்படும்; அக்கொண்கான ர்ட்டில் விளங்கிய எழில், பாழி, பிரம்பு என்ற பெயருடைய மலைகளும், பாரம், பாழி, வியலூர் முதலிய ஊர்களும் அவனுக்கு உரியவாம். காண்கானம், பொன்னுடைமையான் பொலிவுற்றது எனப் போற்றுவர் புலவர்; விண்ணேத் தொடும் கொடுமுடி களையும், பொன்படு பாறைகளையும் உடையது அக்கொண் கானத்து மலை. பாழி, பகைவர் அனுகுதற்கரிய காவல் செறிந்தது; அதனல், வேளிர் பலரும் தாம் அரிதின் ஈட் டிய பெரும்பொருளே ஆங்குவைத்துப் போற்றிக் காத்த னர்; வயலை வேலியுடையது எனக் கூறப்பெறும் வியலூர், மிளகுக் கொடிகளையும், அதன் அருகே கிடந்து உறங்கும் யானேகளையும் உடைய கடற்கரை ஊராம் என இளங்கோ வடிகள் சிறப்பிக்கும் பெருமையுடையது. 'நன்னன், பாழியன்ன கடியுடை வியனகர்ச் செறிந்த காப்பு.’ 'நன்னன் வேண்மான் வய?ல வேலி வியலூர்.” 'பாரத்துத் தலைவன் ஆா நன்னன் எழில் நெடுவரைப் பாழிச் சிலம்பு.”