பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§6 திரையன் சோர் படையில் பணியாற்றி வாழ்ந்த கட்டி என்பானே அடைந்து, தன் ஆற்றலைக் காட்டற்காம் ஏற்ற காலத்தை எதிர்நோக்கியிருந்தான். அக் காலத்தே, தன்னைப் போன்றே, வடநாட்டினின்றும் வந்தவயை ஆரியப் பொருநன், எனும் மற்ருெரு மற்போர் வல்லான், கட்டி பணியாற்றும் சேரர் படைக்குத் தலைவயை கணையனே அடுத்து வாழ்ந்திருந்தான். கணையன், தன்பால் வந்திருக் கும் ஆரியப் பொருகன், ஆற்றலில் அனைவரினும் மிக்கவன்; அவன்ே வேறல் எவரானும் இயலாது என்றெல்லாம் கூறிப் பெருமை பாராட்டிக் கொண்டிருந்தான். அதுபொருத பாணன், கன்னெடு மற்போர் புரியுமாறு அவனே அழைத் தான்; அவனும் இசைந்தான்; இருவரும், ஒருநாள் மற் போர் மேற்கொண்டனர் ; கட்டியும், கணையனும் கவலை யோடு போரைக் கண்டு கின்றனர்; பாணன், பொருநனைத் தன் மார்புறச் சேர்த்து, அவன் தோள்களைத் தன் இரு கைகளாலும் இறுகப் பிணித்துக்கொண்டான் ; பொருநன் பாணன் பிடித்த பிடியினின்றும், தன்னே விடுவித்துக் கொள்ளும்பொருட்டுத் தன் கோள்களை அசைத்து இழுக்க முழுவலி காட்டி முயன் முன் ; ஆல்ை, அந்தோ, அவ்வாறு அவன் முயன்றபோது, பாணன் தான் இறுகப் பிடித்திருந்த பிடியை நழுவவிடாது போகவே, பொருநன் தோள்கள், பாணன் கைகளுக்குள்ளேயே கிடக்க, அவன் உடல் மட்டும் தனியே போந்து புறத்தே வீழ்ந்தது; பொரு கன் இறந்தான் ; பொருநன் பொன்றியது கண்டு கலங்கிய கணையன், தன் பொருநன் தோற்றமைக்கு நாணித் தலை குனிந்தான். மற்போரைப் பார்த்திருந்தோரெல்லாம், பாணன் ஆற்றல் கூறி அவனேப் பாராட்டினர் : - பாணன், . மல்லடு மார்பின் வலியுற வருங் எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருகன், கிறைத்திறள் முழவுத்தோள் கையகத் தொழிந்த திறன்வேறு கிடக்கை நோக்கி, நற்போர்க்