பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புல்லி 69 அருங்குறும் பெறிந்த ஆற்றலொடு பருந்துபடப் பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கைக் கெடாஅ நல்லிசைத் தென்னன்.” (அகம்: டசஉ) வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை மறப் போர்ப் பாண்டியர்.” (அகம் : உஎ) புல்லி ஆண்ட வேங்கடநாடு, வேழங்கள் மலிந்த நாடு. வேங்கடத்தில் கொண்ட வெண்கோட்டு யானைகளை உடை பது பாண்டியர் படை எனக் கூறுவதையும் உணர்க. தாம் வாழும் நாடு வேழங்கள் கிறைந்தது என்பதை அறிந்த அந்நாட்டு வீரர்கள், தாம் வாங்கும் பொருள் களுக்கெல்லாம், யானைகளையும், யாக்னக்கோடுகளையுமே விலையாகக் கொடுப்பர் என்றும், புல்லியின் படைவீரர், தம் நாட்டை அடுத்த காட்டுட் புகுந்து, பிடி யானேகள் வருந்துமாறு, அவற்றின் கன்றுகளைக் கைப்பற்றி, வெண் கடம்ப மரத்தின் கிளைகளை வெட்டி, உரித்தெடுத்த கார் கொண்டு பின்னிய வலிய கயிற்ருல் கட்டிக்கொணர்ந்து, கொடிகள் ஆடும் அழகுடைய தம் ஊரில் உள்ள கள்ளுக் கடைகளின் வாயிலிடத்தே, தாம் வாங்கி உண்ட கள்ளின் விலையாகக் கட்டிப்போவர் என்றும், புல்லியின் வில்வீரர், கள்ளுண்ணற்குக் களிற்றுக் கன்றுகளைக் கைப்பற்றிக் கொணர்வர் என்ருல், அவர்களின் தலைவனுய புல்லி, நாள வைக்கண் தன்னைப் பாடிவரும் பரிசிலர்க்கு, நறவுவிற்றுப் பெற்ற நெல்லோடு, யானேக்கோடுகளையும் கொடுத்தலை விரும்பிப் பகைவர் மார்பில் பாயுமாறு அம்பேவவல்ல விடி வீரர் பலரோடு சென்று, பெரிய யானைகளை வேட்டையால் அவற்றின் வெண்கோடுகளைக் கொணர்வன் என்றும், பிடியினே இழந்த களிமம், களிற்றினே இழந்த பிடியும் அழுது கூப்பிடும் பேரொலி, அம்மலையகத்தே மாருது ஒலிக்கும் என்றும் புலவர்கள் கூறுவர். - 'கறையடி மடப்பிடி கானத்து அலறக் களிற்றுக்கன்று ஒழித்த உவகையர், கவிசிறந்து கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து