பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திதியன் 117. எனும் பெயர் கொண்டிருந்தான் என, அவ்வாராய்ச்சி யாளரே கூறுவதையும் நோக்குக. ஆக, பகைத்து கிற்கும் இருவேறு குலத்தாரும், தம் பெயர்களாக, ஒரு பெயரையே கொள்வது இயல்பே என்பது பெறப்படவும், ஒரு பெயர் ஒருகுலத்தார்க்கே உரித்து என்பதுபட மிகுதிலி, கோசன், அன்னிமிகுதிலி, அவன் பெயரைக் கொண்டுள்ளாள்; ஆகவே அவளும் கோசர் குலத்தவள் எனல் பொருந்தாது. ஆகவே, அன்னிமிகுதிலி, கோசர் குலத்தவள் எனக் கொண்டு, அதுவே காரணத்தால், கோசரைக் கொன்று முரண்போக்கிய திதியனேக் கோசன் எனக் கோடலும் பொருந்தாது. மேலும், 'கோசர்க் கொன்று முரண்போக்கிய கடுக் தேர்த் திதியன்' என்ற தொடரை ஒருமுறை நோக்கினும், கோசர் வேறு; அவரைக் கொன்று முரண்போக்கிய திதியன் வேறு என்பதுதானே பெறப்படுதலேயும் உணர்க. வேளிரொடு போரிட்ட வாள் உடையான் ஒரு திதியன் என்பதைக் கொண்டே, அத் திதியன் வேளாகான் என வரையறுத்துக் கூறுவோர், கோசரைக் கொன்று முரண் போக்கினுன் ஒரு திதியன் என்பதைக் கொண்டு, அவன் கோசனுகான் எனக் கொள்வதன்ருே கியதி. அதை. விடுத்து, கோசரைக் கொன்ருேன், கோசனன்றி வேரு கான் எனல் எவ்வாறு பொருந்துமோ? ஆகவே, அன்னியொடு போரிட்டோனும், அன்னி மிDலியின் துயர் துடைத்தோலும், பொதியில் உடையோ ஆணும், வேளிரொடு பொருதோனும் கோசனுகான் என உணர்க. அவன் வேள் அல்லன் என்பதை அவரே கூறி விட்டனர். - தலையாலங் கானத்தே, பாண்டியைெடு போரிட்ட திதியன், வேளிர் வழிவந்தவனல்லன்: அவன் வேளாயின், அவைேடு சேர்ந்து பாண்டியனே எதிர்த்த இருங்கோ வேண்மான் என்பானே மட்டும், அப் பாட்டைப் பாடிய புலவர், வேள் என வேறுபிரித்து வழங்கியிருக்க மாட்டார்: