பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.உ. இளவிச்சிக்கோ விச்சி என்ருெரு மலே உண்டு ; அதைச் சூழ இருந்த காடு விச்சி நாடு எனப்படும் மலையில் வளர்ந்த பலாவின் பழத்தைக் கவர்ந்து சென்றுண்ட கடுவன், தன் செம்முக மந்தியோடு சென்று, சேய்மைக்கண் கின்ருர்க்கும் தோன்றுவதும், மழை முகிலும் காணலாகா உயர்வுடையது மாய மலேக்கண் வளர்ந்திருக்கும் மூங்கில் து ஏறித் துயில் கொள்ளும் வளம் உடையது அம்மலே வணங்காத மன்ன ரையும், தன் வளத்தால் வணங்கவைக்கும் சிறப்புடையது அந் நாடு. - - - பனிவரை நிவந்த பாசிலப் பலவின் கனிகவர்க் துண்ட கருவிரல் கடுவன்; செம்முக மந்தியொடு, சிறந்துசேண் விளங்கி மழைமிசை அறியா மால்வரை அடுக்கத்துக் கழைமிசைத் துஞ்சும் கல்லக வெற்ப அடங்கா மன்னரை அடக்கும் - - மடங்கா விளேயுள் காடு, (புறம் : உ00) விச்சி நாட்டில் குறும்பூர் என்ருேர் ஊர் உண்டு ; அவ் விச்சி நாடாண்ட அரசர், சேர, சோழ, பாண்டியராய வேந்தர்களேயும் வெல்ல வல்லவராவர். அவர்கள், அவ் வேந்தரை ஒருகால் வென்ருராகக் குறும்பூரில் வெற்றி விழாக் கொண்டாடப் பட்டது என்று கூறுகிருர் பரணர் : வேந்தரை வென்ற விச்சியர், ஒரு காலத்தே, இளஞ்சேரல் இரும்பொறையால் வெல்லப்பட்டனர் எனக் கூறுகிறது பதிற்றுப் பத்துப் பதிகம். வில்கெழு தானே விச்சியர் பெருமகன் வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர் புலிகோக்கு உறழ்கிலே கண்ட - கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே." - . - .)g, gif# : غ-aپنے س{ "இருபெரு வேந்தரும், விச்சியும் வீழ.' -- - - - (பதிற்று : பதிகம் : க.) இவ்வாறு வளம் கிறைந்த நாடும், வன்மை நிறைந்த உடையும் உடைய விச்சியர்குடியில் விச்சிக்கோ எனும்