பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-358 - அகுதை நிற்க, எவ்விக்கு உரிய ஊராக, கீழல் என்பதும் ஒன்று உண்டு. அந் முேற்கண், மருதமரங்கள் செழிக்க வளர்ந்து சிறந்து தோன்றும் களத்தே, தாட்போரைப் பிரித்துக் கடாவிட்ட உழவர், பின்னர்க் கடாக்களேக் கட்டவிழ்த்து விடுத்து, கடுங்காற்று எறியக் கண்டு நெல்லி னேத் துாற்றினராக, காற்றிற் பரந்துசென்ற துரும்புகள் எல்லாம், அக் களத்தே அடுத்துள்ள உப்பளங்களில் சென்று படிந்துவிடவே, அதல்ை, தம் உப்பளம் உறுபயன் அழிந்தமை கண்ட பரதவர், சினங்கொண்டு சென்று, கீழே கிடக்கும் சேற்றுக் குழம்பினே வாரி உழவர்மீது எறிந்து செய்யும் போரை, Eரை திரையோடு நல்லறிவும் நயம் வரப்பெற்ற அந் நர்ட்டு முதியோர் முன்னின்று போக்கிப் பரதவர்க்குத் தேறல் அளித்துச் சினம் ஒழிந்து போகச் செய்வர் என்றும் கூறுவர் குடவாயிற் கீரத்தனர். நீழல் என்பது வேறன்று நிழல் என்பதன் திரிபே நீழல் என்று கூறுவர் ஆராய்ச்சியாளர். "தாழ்சினே மருதம் தகைபெறக் கவினிய நீக்கும் வியன்களம் பொலியப் போர்பு அழித்துக் - கள்ளார் களமர் பகடுதளை மாற்றிக் - கடுங்காற் றெறியப் போகிய துரும்பு உடன் காயல் சிறுதடி கண்கெடப் பாய்தலின், இருநீர்ப் பரப்பின் பனித்துறைப் பரதவர் - தீம்பொழி வெள்ளுப்புச் சிதைத்தலின்சின.இக் கழனி உழவரொடு மாறெதிர்ந்து மயங்கி இருஞ்சேற் றள்ளல் எறிசெருக் கண்டு, நரைமூ தாளர் கைபிணி விடுத்து கண்முதிர் தேறல் நுளேயர்க்கு ஈயும் - - பொலம் பூண் எவ்வி நீழல்." (அகம் : உசுசு) எவ்வி, 'பல்வேல் எவ்வி,” (அகம் : #3-ऊं) எனவும், 'வாய்வாள் எவ்வி, (அகம்: க.கடு, உசுசு) எனவும் அழைக் கப்பெறுதலே நோக்கின், அவன் விற்போரும் வாட் போரும் வல்லவைன் என்பது பெறப்படும் எவ்வி, இவ்வாறு பெரும் படையுடையனேயாயினும், தன் முல்ட்ப்