பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவு. எழினியாதன் எழினியாதன், வாட்டாறு எனும் ஊரில் வாழந்த வேளிர் தலைவனுவன் எழினியாதன், வேளிர்வழி வந்தவன்; வேளிர், பாண்டிநாட்டிலேயே யல்லால், ஏனேச் சேர, சோழ நாடுகளிலும் வாழ்ந்துள்ளனராதலாலும், வாட்டாற்றை அடுத்து வாழ்ந்தோராகக் கூறப்பெறும் கோசர், பாண்டியர் படையில் பணியாற்றியுள்ளனராயினும், அன்னர், தென் பாண்டி நாட்டிலும் வாழ்ந்தனர் என்பதை நாட்டவல்ல சான்று எதுவும் கிடைத்திலது. ஆதலாலும், வாட்டாறு எனும் பெயர் கொண்ட ஊர்கள், சோணுட்டிலும், தென் பாண்டி நாட்டிலும் உள்ளன எனினும், எழினி ஆதன் வாழ்ந்த வாட்டாறு, சோணுட்டு வாட்டாறே எனக் கொள்வர் ஆராய்ச்சியாளர். இவ் வாட்டாறு, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் உளது என்றும், இப்போது, வாட்டாற்றுக் கோட்டை, வாட்டாத்திக் கோட்டை என மருவி வழங்குகிறது என்றும் கூறுப. வளம் நிறைந்த பேரூர், வாட்டாறு; அங்காட்டு நீர் நிலைகளின் கீழிடமெல்லாம் மீன்களாலும், மேலிட மெல்லாம் மலர்களாலும் கிறைந்துகிடக்கும்; வடிகால் களால் சூழப்பெற்ற அந்நாட்டு நெல்விளே நன்செய்கள், பறையறைந்து ஒட்டும் அளவு பறவைகள் கூட்டமாகக் கூடுகட்டி வாழும் வளம் உடையன; கடற்கரைக்கண், இரைதேர்ந்துண்ணும் இனப்பறவைகள் எழுந்தோடுமாறு, சிறுமணல்களே அள்ளித் தாவும் ஆங்கு வீசும் கடற் காற்று; அவ்வூர்வாழ் கோசர் முதலாம் மக்கள், மட்டுண்டு மகிழ்ந்து, குரவை முதலாம் கூத்தாடி இன்புறுவர். இத்தகு வளஞ்சால் பெருநகரைப் பெற்று ஆளும் எழினியாதன், ஊக்கம் அற்ருர்க்கு உறுதுணேயாய் கின்று காக்கும் உரனும், அறிவுரையளித்து ஆகும் வழிகாட்டும் ஆருயிர் நண்பரை இல்லாரை, ஆருயிர் நண்பனுய் அமைந்து காக்கும் அறிவுத்திறனும் உடையவைன; இவ்வாறு ஆண்மையும், அறிவும் உடையய்ை, அறிஞர் பொற்ற வாழும் வேளிர் வழிவந்த எழினியாதன், தன்சீனப் பாடி வருவாாககு வரையாது வழங்கும வள்ளியேனும்