பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௬. உழுந்தினைம் புலவன்

உழுந்தினைம் புலவன் என்ற இப்பெயர், இவர்க்குப் பெற்றோர் இட்டு வழங்கிய இயற்பெயரன்று; யாதோவொரு காரணம் கருதிவந்த காரணப் பெயரே; ஆனால், அக்காரணம் யாது என்பதை இப்போது நம்மால் அறிதல் இயலாது போயிற்று ; இவர் பாடிய பாட்டொன்று குறுந்தொகைக்கண் இடம்பெற்றுளது.

தினையை உண்டு அழிப்பனவாகிய யானை, இளி, இவற்றுள், யானை ஆண்மையும், ஆற்றலும் வாய்ந்தது; கிளி ஆட்களைக் காணவே அஞ்சி ஓடும் மென்மையுடையது என அறிந்தவராதலின், கானவர், அவற்றை ஓட்டுங்கால் யானையை ஓட்ட அம்பும், வில்லும் உடைய வீரரைப் - பணிப்பர்; கிளிகளை ஓட்ட, தழை உடையுடைய, தம் மகளிரைப் போக்குவர் எனக் கூறியதோடு, பானையை வட்டும் செயலைக் கடிதல் என்ற சொல்லாலும், கிளிகளை ஒட்டும் செயலை ஒப்புதல் என்ற சொல்லாலும், குறித்திருப்பது புலவர்தம் புலமையின் பெருமையினைப் புலப்படுத்துவதாம்.

“வினை, பகை என்றிரண்டின் எச்சம், நினையுங்கால் யெச்சம் போலத் தெறும்” என்பவாகலின், எடுத்த வினையைக் குறையற முடித்து நிற்காது, குறைவினையா இறுத்தல் பின்னர்ப் பெருந்துயர் விளைதற்குக் காரணமாம் ஆதலின், வினையறிந்தார், குறைவினைகாணின் பெரிதும் வருந்துவர்; இஃதறிந்த புலவர், தலைவன், தான் விரும்பிய தலைவியைப் பெறமாட்டா நிலையைக் குறைவினையாகக் கொண்டு உளம்மிக அழிவன் எனக் கூறியுள்ளதும் உணர்ந்து மகிழ்தற்கு உரியதாம்.

“குறும்படைப் பகழிக், கொடுவில் கானவன்
புனமுண்டு கடிந்த பைங்கண் யானை
நறுந்தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு
குறும்பொறைக்கு அணவும் குன்ற நாடன்
பணிக்குறை வருத்தம்.” (குறுந்:௩௩௩)