பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலோச்சனார்

93


“இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை,
நீலத் தன்ன பாசிலை அகந்தொறும்
வெள்ளி அன்ன விளங்கிணர் நாப்பண்

பொன்னின் அன்ன நறுந்தாது உதிர." (நற்: உ௪௯)

இற்செறிக்கப்பட்ட தலைமகள், தலையளி செய்யும் தலைமகன் உளன் என்ற உள்ளத்து உறுதியால் உரன் அழியாது இருந்தமைக்கு, வானுற உயர்ந்த தன் கோட்டையைச் சூழ, யானைப்படை மிக்க பகைவேந்தன் வந்து முற்றியிருப்பிலும், தன் கோட்டையைப் பகைவர் பாழாக்கா வண்ணம் காத்து நிற்கவல்ல பேராண்மை உடைய வீரர் பலரை உடையேன் என்னும் செருக்கால், அக்கோட்டைக்கு உரியான், முற்றுகை குறித்துக் கவலையுறாது இருத்தலை உவமை காட்டிய புலவர் உலோச்சனார், போர் நெறியுணர்ந்த புலவராவர் எனக்கூறல் பொருத்தமுடைத்தாமன்றோ?

விசும்புறழ் புரிசை வெம்ப முற்றிப்
பைங்கண் யானை வேந்துபுறத்து இறுத்த
நல்எயில் உடையோர் உடையம் என்னும்
பெருந்தகை மறவன் போலக் கொடுங்கழிப்
பாசடை நெய்தல் பனிநீர்ச் சேர்ப்பன்
நாம முதலை நடுங்குபகை அஞ்சான்
காமம் பெருமையின் வந்த ஞான்றை

அருகா தாகிய வன்கண் நெஞ்சம், (நற்: ௨௮௭)