பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அதியன் விண்ணத்தனார்


னுரை வழங்கி விருந்தளிப்பர் எனவும், பரதவர் இவ்வாறு விருந்தளிக்கும் பண்பினராகவே, அவர்தம் பரதவர் சேரியில் ஒருநாள் இருந்து விருந்துண்டார், தாம் வாழும் ஊரைப் பலநாள் மறந்துவிடுவர் எனவும், பரதவர்தம் பண்புடைமைகளைப் பலபடப் பாராட்டியுள்ளார் புலவர் :

“வேட்டம் பொய்யாது வலைவளம் சிறப்பப்
பாட்டம் பொய்யாது பரதவர் பகர
இரும்பனம் தீம்பிழி உண்போர் மகிழும்
ஆர்கலியாணர்.'” (நற் : ௩.அ)

“பெயினே, விடுமான் உழையினம் வெறுப்பத் தோன்றி
இருங்கதிர் கெல்லின் யாணர் அஃதே ;
வற்ப்பின், மாரீர் முண்டகம் தாஅய்ச் சேறுபுலர்த்து
இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும்
அழியா மரபின் நம்மூதுார்.'” (நற் : கூகக)

"வல்லெதிர் கொண்டு, மெல்விதின் வினே இத்
துறையும் மான்றின்று பொழுதே ; சுறவும்
ஒதம் மல்கலின் மாறா யினவே :
எல்லின்று ; தோன்றல் செல்லாதிம்; என
எமர்குறை கூறத் தங்கி, ஏமுற
இளையரும் புரவியும் இன்புற, யுேம்
இல்லுறை நல்விருந்து அயர்தல்
ஒல்லுதும் பெரும !” (அகம்: .90)

"ஒருநாள் உறைந்திசி னோர்க்கும், வழிநாள்

தம்பதி மறக்கும் பண்பின் எம்பதி."
(அகம் :௩00)

புலவர் உலோச்சனார் ஆங்காங்கு எடுத்தாளும் உவமைகள் அறிந்து இன்புறத்தக்கனவாம் ; புன்னைமரத்தின் கருநிறக்கோடு இரும்புபோல் உளது; அப்புன்னையின் நீலநிற இலைகள் நீலமணிபோல் உள; அதன் வெண்ணிறப் பூக்கள் வெள்ளி பூத்தாற்போன்று காட்சிதரும்; அம் மலரின் பொன்னிறப் பூந்தாது, பொன் தூள் போலும் எனக் கூறும் உவமை, புலவர்தம் பொன் முதலாயின.இந்த அறிவின அறிவித்து அழகுதந்து நிற்றல் காண்க.