பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலோச்சனர்

91

ஒழுகிய உதிரத்தால் கருங்கடல் நீரும் செந்நீராம் எனவும், இறுதியில் அவை தம் வலியிழந்து அடங்க, அவற்றை அரிதிற் கரைசேர்ப்பர் எனவும், அப்பரதவர்தம் மீன் பிடிக்கும் தொழிலையும் தெளிய உணர்ந்து உணர்த்தியுள்ளார் புலவர் உலோச்சனார்.

"வடிக்கதிர் திரித்த வன்ஞாண் பெருவலை
இடிக்குரற் புணரிப் பெளவத் திடுமார்
நிறையப் பெய்த அம்பி, காழோர்
சிறையருங் களிற்றிற் பரதவர் ஒய்யும்." (நற்: எச)

'பரதவர்,
எறி உளி பொருத ஏமுறு பெருமீன்
புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மருப்பட
விசும்பணி வில்லிற் போகிப் பசும்பிசிர்த்
திரைபயில் அழுவம் உழக்கி, உரன் அழிந்து
திரைதிமில் மருங்கில் படர்தரும்.' (அகம்: உக௦)

மழை பொய்யாது பெய்தலால், கடல் மீன்முதலாம் செல்வத்தால் சிறப்புறும் ; கடல் சிறத்தலால், பரதவர்க்கு மீன் முதலாயின நிறையக் கிடைக்கும். கிடைத்த அவற்றை விற்றுப் பெறும்பொருளால், கள் பெற்று வாழ்வர் பரதவர் எனவும், பரதவர் நிலத்தே மழை பெய்யின் நெல் விளைந்து நிறைசெல்வம் தரும் : அம்மழை பெய்யாத காலத்திலோ எனின் கடல் நீரால் விளையும் உப்பு உறுபொருள் தரும்; ஆகவே பரதவர் நிலத்தே வறுமை வந்தடைதல என்றும் இல்லை எனவும், நம் நாடு செல்வத்தால் செழிப்பவே, பரதவர் தம் நாடு நோக்கி வரும் புதியரைக் காணின், அவரை அணுகி, "ஐய! பொழுதும் மறைந்துவிட்டது நீர்த்துறைகளில் அலைகளும் மிக்கு எழுகின்றன : ஆண்டுச் சுறாமீன்களால் ஏகம் உண்டாதலும் கூடும்; இருளும் நிறைந்துவிட்டது; ஆகவே, இனி ஈண்டுவிட்டுப் போதலை ஒழிவீராக! நீங்களும், உங்களைத் தொடர்ந்து வந்துள இளையரும், உங்கள் குதிரைகளும் ஈண்டிருந்து யாம் அளிக்கும் விருந்துண்டு விடியச் செல்வீராக,' என இன்முகத்தோடு கூடிய இன்