பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩க. எயிற்றியனார்

இவர் வரலாறு குறித்து எதுவும் விளங்கவில்லை. தலைவன் ஒருவன், தான் களவிற்கண்டு காதலித்த ஒரு தலைவியை மீண்டும் காண்டல் அரிதாயகாலத்தே, அவள் வாய், கூந்தல், கண் முதலாயினவற்றை நினைத்து நினைந்து பாராட்டுவான்; அவள், முள்போலும் கூரிய பற்களினின்றும் மாறும் அமிழ்தம்போலும் இனிய நீர் நிறைந்த, அழகிய சிவந்த வாயுடையவள் ; மிகவும் மலைக்கும் அகிற்புகையூட்டப் பெற்றுக், கருமணல்போல் தோன்றும் மறிய மயிர் உடையாள் ; பெரிதாய், மருட்சி நிறைந்த தாய், அருட்பார்வை உடையதாய கண்துடையாள் என, அவற்றின் காட்சி அழகும், கருத்தழகும் ஒருங்கே தோன்றப் பாராட்டினான் எனப் பாடிய பாட்டொன்று குறும் தொகைக்கண் இடம் பெற்றுளது. எயிறு முதலாயினவற்றின் சிறப்புத்தோன்ற அடைபல தந்து பாடிய புலமை பாராட்டுதற்குரியதாம்.

“உள்ளிக் காண்பென் போல்வன்? முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் அம்செவ்வாய், கமழ் அகில்
ஆரம் ஊறும் அறல் போல் கூந்தல் ;
பேரமர் மழைக்கண் ; கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே.”

(குறுங் : ௨௮௬ )

தலைவன் ஒருவன், தான்விரும்பும் தலைவியின் பற்கள் முள்போலும் கூர்மைய; அமிழ்தம் போலும் இனிய நீர் ஊறுவ எனக் கூறிப் பாராட்டினாள், “முள் எயிற்று அமிழ்தம்” எனப் பாடிய சிறப்பால், இவர் இப்பெயர் பெற்றார் எனலும் பொருந்தும்.