பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எயினந்தை மகனார் இளங்கீரனார்

101

ஆகம் அடைதந் தோளே; அதுகண்டு
ஈர்மட் செய்கை நீர்படு பசுங்கலம்
பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு எம்
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்துவந் தன்றே.”

(நற் : ௩௦௮)

அவள் துயர்நிலை கண்ட அவன், அன்று போதலைக் கைவிட்டான் எனினும், கடமை உணர்ச்சி உடைய அவன், பொருள் தேடிப் போதலை அறவே கைவிட்டானல்லன்; பின்னொருகால் போகவே துணிந்துவிட்டான்; துணிந்த அவன் அவளை அருகழைத்து, அன்புரை பல வழங்கி இறுதியில் தன் கருத்தினை உணர்த்தினான்; கேட்ட அக்கணமே அன்று அலர்ந்த தாமரை போன்றிருந்த அவள் அழகிய முகம், விடியற்காலத்தே தோன்றும். வெண்மதி வெளிறித் தோன்றுவதுபோல் வெளுத்து ஒளிகுன்றிவிட்டது; அவள் உடல் அழகும் குறைந்துவிட்டது; முகம் கவிழ்ந்துவிட்டது; செயலற்ற அவள் கால்விரல்கள் அவளை அறியாமலே நிலத்தைக் கிளைக்கத் தொடங்கின; கண்கள் கண்ணீரால் நிறைந்துவிட்டன்; அக்கண்ணீர் அவள் ஆகத்தை அறவே நனைத்துவிட்டது; கால்கள் நிற்க மாட்டர்வாய் நிலை கலங்கின; கழிபெரும் துயருடையளாயினாள்; அவன் பிரிவைப்பொறாது இவ்வாறு பெருந்துயர் உறும் அவள் உள்ளம், அவன் பிரிந்து செல்ல வேண்டிய இன்றியமையாமையினை உணர்ந்துள்ளது; ஆதலின், பிரியும் அவன் முன் தன் கலங்கிய நிலையோடு சேறல், அவன் செலவு முயற்சிக்குக் கேடு தரும் என உணர்ந்தாள்; கலங்கிய தன் முகத்தைத் தன் கருகி தன் கூந்தலால் மறைத்து நின்றாள். சென்று, நன்றே வினைமுடித்து வீறு எய்துக என வாழ்த்த எண்ணுகிறது. அவள் உள்ளம்; ஆனால், அவன் பிரிவுத் துயர், அவ்வுரையினை உரைக்கா வண்ணம் நாவைத் தடைசெய்கிறது; எவ்வாறோ, நடுங்கிய அக்நாக்கினின்றும், அப்பொருள் தோன்றும் சொற்கள் வெளிவந்துவிட்டன; வாழ்த்தி விடை தந்துவிட்டாள்; அந்நிலையில் அவள் விட்ட பெருமூச்சு, அப்பிரிவால் அவள்