பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

அதியன் விண்ணத்தனார்

உறும் அளத்தற்காகா அருந்துயரினை அறியக் காட்டுவதாயிற்று. தமிழ்நாட்டு இல்லங்தொறும் காணப்பட்ட இவ்விடைதரு காட்சியினை விளங்க உணர்த்தியுள்ளார் புலவர் :

"செய்பொருள் மருங்கிற் செலவுதனக்கு உரைத்தென
வைகுநிலை மதியம் போலப் பையெனப்
புலம்புகொள் அவலமொடு புதுக்கவின் இழந்த
நலங்கெழு திருமுகம் இறைஞ்சி, நிலங்கிளையா
நீரொடு பொருத ஈரிதழ் மழைக்கண்
இகுதரு தெண்பனி ஆகத்து உறைப்பக்
கால்நிலை செல்லாது, கழிபடர்க் கலங்கி
நாநாடுக்குற்ற நவிலாக் கிளவியொடு
அறல்மருள் கூந்தலின் மறையினள் திறன்மாண்டு
திருந்துக மாதோ நும்செலவென, வெய்துயிராப்
பருவரல் எவ்வமொ டழிந்த

பெருவிதுப் புறுவி.”

(அகம் : உ௪௪)


ஊர்ப்பற்று உயிர்ப்பற்று என்ப; ஊர்ப்பற்றில்லா உயிரை உலகில் காணல் அரிதாம்; இரவும், பகலும் அதுவே நினைவாய் இருந்து வாழ்ந்த ஊரைப் பிரிந்துபோக வேண்டிய நிலை உற்றார், தம் ஊரை நினைந்து உருகும் நிலை அம்மம்ம! கொடிது கொடிது! பொருளின் இன்றியமையாமையால் தான் பிறந்த ஊரைவிட்டுப் பிரிய நேர்ந்த ஒரு தலைவன், அதைப் பிரியமாட்டாது வருந்துவதையும், பிரிந்து செல்வான் பலகாலும் திரும்பித்திரும்பி அதை நோக்கிக்கொண்டே செல்வதையும், அவ்வாறு செல்வழி, அவ்வூரின் ஒவ்வொரு பகுதியும், மறைந்து காணாது ஒழியும் தொறும் "அந்தோ எம்மூர் மன்றமும் மறைந்து விட்டது! எம்மூர் மரங்களும் மறைந்துவிட்டன!” எனக் கூறிக் கண்ணீர் விடுவதையும் எடுத்துக்காட்டி, இருந்து வாழ்ந்த ஊரைப், பிரிந்துபோவதால் உண்டாம் பெருங் துயரினை விளங்க உணர்த்தியுள்ளார் புலவர் :