பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எயினந்தை மகனார் இளங்கீரனார்

103

'எல்லையும், இரவும் வினைவயிற் பிரிந்த
உள்ளம்! முன்னுறுபு அடைய உள்ளிய
பதிமறந்து உறைதல் வல்லுநம் ஆயினும்
அதுமறந்து உறைதல் அரிதா கின்றே” (அகம் : ௨௯௯)

“அளிதோ தானே! எவனா வதுகொல்?
மன்றும் தோன்றாது; மரலும் மாயும்
............ பெருநல் ஊரே.” (அகம் : ௨௩௯)

மணிகள் இழைத்துச் செய்யப்பெற்ற கிண்கிணிபோலும் அணிபல அணிந்து, பால்குடித்து மகிழும் பவழம் போலும் செவ்வாயினின்றும் இனியநீர் இடைவிடாதொழுக விளங்கும் அழகிய மகன், தண் மார்பின்மீது ஏறியும் இறங்கியும் ஆடல்காட்ட அன்புமிக்குடையளாய் விளங்கும் தன் மனைவியைக் கண்டு கண்டு களிப்பு மிகக்கொள்ளும் ஆண்மகன் ஒருவனை நமக்கு அறிமுகம் ஆக்கியுள்ளார் புலவர்.

“குரும்பை மணிப்பூட் பெருஞ்செங் கிண்கிணிப்
பாலார் துவர்வாய்ப் பைம்பூட் புதல்வன்
மாலைக் கட்டின் மார்பூர்பிழிய
அவ்வெயி றொழுகிய வெவ்வாய் மாணகைச்
செயிர்தீர் கொள்கைம் உயிர்வெங் காதலி.”

(நற் : ௨௬௯.)

பெண்மான், கானவர் எய்த அம்பேறுண்டு இறந்து விட்டதாக, அதன் குட்டிகள், தம் தாய்க்கு உண்டான கேடறியமாட்டாவாய் மகிழ்ந்து அதன் அருகே, துள்ளிக் குதித்து ஆடி மகிழ, ஆண்மான், தன் பெடையின் பிரிவை எண்ணி எண்ணி வருந்தி, தழை மேய்தலும் செய்யாது. நீர் குடித்தலும் மாட்டாது, வேலேறுண்ட மக்கள் அலறிப் புடைத்து அழுதலைப்போல், கலங்கிக் கண்மூடிக் கிடக்கும் கொடிய காட்சியைக் காட்டுவதன்வழியே, காட்டு விலங்குகளின் கழிபேரன்பினைக் காட்டியுள்ளார் புலவர் :