பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

அதியன் விண்ணத்தனார்

“ஆடவர்,
கணையிடக் கழிந்ததன் வீழ்துணை உள்ளிக்
குறுநெடுந் துணைய மறிபுடை யாடப்
புன்கண் கொண்ட திரிமருப்பு இரலை
மேய்பதம் மறுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
நெய்தலம் படுவில் சின்னீர் உண்ணாது
எஃகுறு மாந்தரின் இனைந்துகண் படுக்கும்.”

(அகம் : ௩௭க)

கோடை வெம்மையால் வாடிய மூங்கிலில், வண்டு துளைத்து உண்டாக்கிய துளையின் ஊடே, அக்கோடைக் காற்று நுழைந்து வீசுவதால் எழும் ஒலி, இனிமை தந்து நிற்றல் கண்டே, மக்கள் குழலாகிய இசைக்கருவியினைத் தோற்றுவித்தனர்; இதை உணர்ந்த புலவர், அவ்வொலி குழல் ஒலி போலும் எனக் கூறலும், இலுப்பை அரும்புகள் நெருங்க நின்று காட்டும் காட்சி, வாய் திறந்த அம்பறாத் தூணியில் சேர்த்துவைக்கப்பட்டுள்ள அம்புக் காட்சியினையும், அவ்விலுப்பையின் அரும்புகள் உதிர்ந்து உருண்டு, துளைபொருந்திய முத்துக்கள் உதிர்ந்து உருள்வன போலும் காட்சியினையும் காட்டி நிற்றலும், புலவர் தம் இயற்கை உணர அறிவினை உணர்த்தி நிற்றல் உணர்க :

“புதலிவர் ஆடமைத் தும்பி குயின்ற
அகலா அந்துளை கோடை முகத்தலின்,
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார்கோல்
ஆய்க்குழல் பாளியின் ஐதுவந்து இசைக்கும்.”

“யாத்த தூணித் தலை திறந் தவைபோல்
பூத்த இருப்பைக் குழைபொதி குவியிணர்
கழல்துளை முத்தில் செந்நிலத்து உதிர”

(அகம்: ௨௨௫)