பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

அதியன் விண்ணத்தனார்

 மதியாது மதங்கொண்ட யானை செல்லுவது போலும் எனக் கூறியுள்ளதும், அவன் ஆங்குத் தனியே போருடற்றும் அவ்வீரன்பால் பேரன்பும், அவனைச் சூழ்ந்து நின்று அவனுக்குத் துயர்தரும் பகைவர்பால் பெருஞ்சினமும், உடையான் அவனை அந்நிலையில் எவரும் தடுத்தல் அரிதாம் என்பதை விளக்க, தன் கன்றின்பால் பேரன்பும், அதைத் தன்னினின்றும் பிரித்துத் தளைத்து நிறுத்துவார்பால் பெருஞ்சினமும் கொண்டு பாய்ந்தோடும் பசுவை அவனுக்கு உவமை கூறியதும், புலவர் தம் பெருமையினைப் புலப்படுத்தி நிற்றல் காண்க.

‘’செற்றிய
திணிநிலை அலறக், கூழை போழ்ந்துதன்
வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி
'ஒம்புமின்! ஒம்புமின்! இவண்' என ஒம்பாது
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
கன்றமர் கறவை மான
முன் சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.”
(புறம் : உஎ௫)


இவ்வாறு பலர்கூடித் தடுத்து நிறுத்தவும் நில்லாது, தான் எண்ணியதை முடிக்கும் திண்ணியனாகவே, அவன் அழகிய கண்ணி ஆடிக் கோடலும், அதற்கேற்ப ஆடையால் தன்னை அலங்கரித்துக் கோடலும், வேந்தனொடு ஒருங்கிருந்து உயர்ந்து தோன்றலும் நனிமிகப் பொருந்துமாம், எனப் பாராட்டி, அத்தகைய ஆண்மையில்லாதார், தம்மை ஆடைஅணிகளால் அலங்கரித்துக் கோடல் அறிவற்ற: செயலாம் என்பது குறிப்பாற் புலப்பட வைத்துளார்.

‘’கோட்டங் கண்ணியும், கொடுந் திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
ஒத்தன்று மாதோ இவற்கே." (புறம் : உஎ௫)