பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

அதியன் விண்ணத்தனார்

விடுவேன்; அதுகாறும் ஆற்றியிருக்க எனக் கூறிச் சென்றான் தலைவன் தான் கூறியன பொய்யான் என்ற உறுதியான உள்ளம் உடையவள் அவன் மனைவி; அதனல் அவன் சொல்லை நம்பி அக்காலம்வரை ஆற்றியிருந்தாள் அவள். அவன் கூறிச்சென்ற கார்காலம் வந்துவிட்டது; ஆனால், அவன் வந்திலன்; சென்ற இடத்தே எடுத்த வினை முடியாத காரணத்தால், குறித்த காலத்தே அவளால் வர முடியவில்லை. அவன் கூறிச்சென்ற காலம் வந்துவிட்டதே: அவன் இன்னமும் வந்திலனே; இனி இவள் ஆற்றாள்; இவளை எவ்வாறு ஆற்றிக் காப்பேன் எனக் கவலைகொண்டாள் தோழி. காடுகளில் கொன்றை மரம் மலர்ந்து விட்டமையால் கார்காலம் வந்துவிட்டது என்பதை அறிந்தாள் தோழி அதனால் அவள் வருந்தினாள் தோழியின் வருத்தத்தை உணர்ந்தாள் தலைவி, கொன்றை மலர்ந்துவிட்டது என்பதை அவளும் அறிந்தாள்: கொன்றை கார்காலத்தே மலரும் இயல்புடையது என்பதையும் அவள் அறிவாள். ஆனால், சென்ற அவர் கார்காலத் தொடக்கத்தே வந்துவிடுவதாக வாக்களித்துச் சென்றுள்ளார்; அவர் வாக்கு என்றும் பொய்த்தல் இல்லை, பொய் கூறி அறியார் அவர் ; ஆகவே, அவர் கார்காலத் தொடக்கத்தே தவறாது வருவர். அவர் வரும் காலந்தான் கார் காலமாகும்; அவர் வருவதற்கு முன்னரே, காட்டுக் கொன்றைகள் மலர்ந்துவிட்டன. ஆயினும், இது கார்காலமாகாது; கொன்றைகள் உண்மையில் காலமல்லாக் காலத்திலேயே மலர்ந்துள்ளன. ஆகவே, கொன்றைகளின் செயலால், இதைக் கார்காலம் எனக் கொண்டு, அவர் வாராமை குறித்து வருந்தல் அறிவுடைமையன்று என்று. கூறித் தன்பொருட்டு வருந்தும் தோழியைத் தானே தேற்றினாள்; தன் தலைவன் கூறிய சொல்லில் அசையாத நம்பிக்கை கொண்டுள்ள அக்காலத் தலைமகளின் உள்ளத்தின் உயர்வு தான் என்னே! தம் இயல்பில் என்றும் தவறுதல் இல்லா இயற்கைப் பொருள்களின் இயல்பினை நம்ப மறுக்கும் அவள் உள்ளம், தன் தலைவன் கூறிய சொல்லை நம்பத்