பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒதலாந்தையார்

119

துணிகிறது! அவன் சொல் தவறுபடுதலும் உண்டு என்பதை நம்ப மறுக்கிறது ! எத்துணை உயரிய உள்ளம் அவ்வுள்ளம்: இவ்வுள்ளமன்றோ இக்கால மகளிர்க்கு மிக மிகத் தேவை இத்தகைய உள்ளத்தை உணர்ந்து உணர்த்திய புலவர் ஒதலாந்தையார் தம் உயிர் ஒவியம் கண்டு உணர்வு பெறுவோமாக !

"கானம், கார் எனக் கூறினும்,
யானோ தேறேன்; அவர்பொய்வழங்கலரே”

(குறுந்: உக)


வினைமேற் சென்ற தலைவன், வந்துவிட்டான்; தலைவியும், தோழியும் எதிர்பார்த்த காலத்திற்கு முன்னரே வந்துவிட்டான்; அது அவர்கட்குப் பெருவியப்பாயிற்று: அத்துணைச்சேண் நெடுந் துரத்தை, அத்துணை விரைவில் கடந்து வருதல் அவனுக்கு எவ்வாறு முடிந்தது என்பதை அறியத் துடித்தது அவர்கள் உள்ளம்: அதை அறிந்தான் அவன் பிரிந்து செல்லுங்கால், உங்களைப் பிரிந்து செல்ல வேண்டியுளதே என்ற கவலை, கால்களைத் தளைத்ததாலும், உங்களையே உள்ளிச் சென்றமையாலும் விரைந்து செல்ல முடியவில்லை; அதனால், வழி நீண்டு கொண்டே போவது போல் தோன்றிற்று; ஆனால் மீண்டு வருங்கால், உங்களைக் காண வேண்டும் என்ற வேட்கை உள்ளிருந்து துரத்த விரைந்து வந்தேனாதலின், போங்கால் நீண்டு தோன்றிய அவ்வழி, நனிமிகக் குறுகிவிட்டது. என்று கூறினான் தலைவன்: என்னே அவன் உள்ளம்!

பிரிந்த காலைத்
தவநனி நெடிய வாயின; இனியே
அணி இழை உள்ளியாம் வருதலின்
அணிய வாயின சுரத்திடை ஆறே." (ஐங் : ௩௫௪)