பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓரம்போகியார்

121

குரிய ஆமூர், பகற்காலத்து ஒளிபோலும் பேரொளி நிறைந்த விளக்குகளைப் பெற்றுள்ளமையால், இரவுக் காலத்தின் இயல்பினை அறியமாட்டாப் பெருஞ்சிறப்புடையது. "பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா, வெல் போர்ச் சோழர் ஆமூர்", "கதிரிலை நெடுவேல் கடுமான் கிள்ளி, மதில்கொள் யானே' (ஜங் : ௫௩,௭௮.)

பாண்டியர், திண்ணிய தேர்ப்படையுடையவர்; தம்மைப் பாடிவருவார்க்குத் தேர் பல அளிக்கும் வண்மைக் குணமுடையவர்: அவர்க்குரிய தேனூர், ஆற்றுப் பெருக்கு அற்று, அடிசுடும் அந்நாளும், ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும் சிறப்புடையது; கரும்பாலை ஒலியாலும், களிறுகளின் பிளிற்றொலியாலும் நிறைந்தது; பல கதிர்களை யுடைய ஞாயிறேபோலும், பல கதிர்களையுடைய வேள்வித் தீயாலும், ஆம்பல்நிறை வயல்களாலும் விளக்கம் பெற்றது. "திண்தேர்த் தென்னவன் நன்னாட் டுள்ளதை, வேனிலாயி னும் தண்புனல் ஒழுகும் தேனூர்," "கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும், தேர்வண் கோமான் தேனூர்,” "பகலில் தோன்றும் பல்கதிர்த் தீயின், ஆம்பலம் செறுவின் தேனுார்' (ஐங் : ௫௪,௫௫,௫௭)

வீரான், வரையாது வழங்கும் வள்ளன்மையுடையவன்; அவன் இருப்பை, அவன் வண்மைக்குத் துணைபுரியுமாறு மலைபோல் உயர்ந்த நெற்போர் பல நிறைந்த சிறப்புடையது ."விண்டு வன்ன வெண்ணெல் போர்விற், கைவண் விராஅன் இருப்பை." (ஜங் : ௫௮)

மத்தி, வண்மையாற் சிறந்தவன்; அவன் கழார்த் துறை, கரைக்கண் நிற்கும் மாமரத்தின், விளைந்து முற்றிய கனிகள் காம்பற்று விழு தாறும் எழும் 'துடும்’ எனும் ஒலியால் நிறைவுற்றது. ' வடி மாஅத்து விளைந்து உகு தீம்பழம், நெடுநீர்ப் பொய்கைத் துடும் என விழூஉம, கைவண் மத்தி கழார்" (ஐங் : ௪க.)

புலவர் ஓரம்போகியார், நீரினும், நிலத்தினும் வாழும் உயிர் வகைகள் மரஞ்செடி கொடிகள் ஆகியவற்றின் இயல்புகளை உள்ளவாறுணர்ந்த ஒர் உயிர்தாம் புலவராவர்.