பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

அதியன் விண்ணத்தனார்

நண்டு, புள்ளிகள் பொருந்திய ஓடுடையது; அது தான் வாழும் இடத்தே வளர்ந்திருக்கும் ஆம்பல் முதலியவற்றின் தண்டுகளை அறுக்கும் இயல்புடையது; “புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்” ; அது, நீர்நிலைகளை அடுத்து வளர்ந்துள முள்ளிச் செடிகளின் வேர்க்கண் வளை அமைத்து வாழும்; “புள்ளிக் கள்வன், முள்ளிவேர் அளைச் செல்லும் ஊரன்.” நண்டு, சினையீனும் காலத்து, அதன் வாலின் கீழ் உள்ள சிறு மயிர்களில் அதன் சினைகள் ஓட்டிக் கொண்டு கிடக்கும்; சினை பயந்த நண்டு, உடல் சுருங்கிப் பின் முன்னையீனும் உடல் பருத்தல் வேண்டி, ஓடு மாற்றத் தொடங்கும்; அது புத்தோடு பெறுங்காலத்தே, அதன் வாலில் ஒட்டிக் கிடந்த சினைகள் பொரித்துத் தாய் நண்டைவிட்டு நீங்கும்; சினை பயவாமுன் இருந்த நிலைமையின் வேறாய், புத்தோடும், பருவுடலும் பெறுவான்; வேண்டி, மெலிந்து, ஓய்ந்து ஓடுங்கிக்கிடக்கும் நண்டு, இறந்ததுபோல் தோன்றும் ஆதலின், நண்டு பிறப்பின், தாய் இறக்கும் என்ற கொள்கையும் உண்டு; “தாய் சாப்பிறக்கும் புள்ளிக்கள்வன்.” நண்டு, நெற்கதிர்களை அறுத்துக் கொண்டு சென்று தன் வளையுள் புகும்; “செந்நெலம் செறுவிற் கதிர்கொண்டு கள்வன் தண்ணக மண்ணளைச் செல்லும்.” கழனியில் விதைத்த வெண்முளைகளைக் கழனியைக் காவல்புரிவாரையும் அஞ்சாது, கடித்துப் பாழ்செய்யும்; “மாரி கடிகொளக் காவலர் கடுக், வித்திய வெண்முளை கள்வன் அறுக்கும்,” நண்டின் கண்கள், வேம்பின் அரும்பு போல் காட்சி தரும்; “வேப்பு நனை அன்ன நெடுங்கட் கள்வன்,” நண்டைப்பற்றி அவர் நமக்கு அறிவிப்பன இவை.

முதலை, தான் ஈன்ற குட்டிகளைத் தானே தின்னும் கொடுமையுடையது; “பிள்ளை தின்னும் முதலை,” “தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை,” ஆமை, இடையூறில்லா இடந்தேடிச் சென்று, ஆங்கொரு குழிசெய்து, அதன்கண் தன் சினைகளை ஈன்று, அவ்விடத்தை மணலால் மூடி மறைத்துவிட்டு நீர்நிலை புகுந்துவிடும்; முட்டைகள் பொரித்தவுடன், யாமைப் பார்ப்புக்கள், மணலைக் கிளைத்-