பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓரம்போகியார்

127

உணர்ந்த புலவர், பார்ப்பார் முதலாம் பல்வேறு இனத்தினரும், ஓதல் முதலாம் ஒழுக்கங்களை வழுவாது கடைப்பிடிப்பாராக எனக்கூறும் கருத்தான் தலைமை கருதிப் “பார்ப்பார் ஓதுக” எனக்கூறி வாழ்த்தியுள்ளார்.

ஒழுக்கநெறி கிற்க என உடன்பாட்டு வாய்பாட்டான் வாழ்த்தியதோடு அமைதியுற்றிலது புலவர் உள்ளம்; உயிரினும் சிறந்ததாக ஓம்பப்படவேண்டுவது ஒழுக்கமே ஆதலின், அவ்வொழுக்க நிலைபேற்றினை எதிர்மறை வாய்பாட்டானும் வற்புறுத்துவான் வேண்டி, ஒழுக்கக்கேடுகளுள் ஒன்றாய களவு ஒழிக என்றுகூறி, ஒழுக்கக்கேடுகள் எல்லாம் ஒருங்கே ஒழிக என்றும் உணர்வூட்டியுள்ளார்.

“பார்ப்பார் ஓதுக”; “களவில் லாகுக” எனச் சிறப்பு வகையான் அறம் ஒன்றையும், அறமல்லது ஒன்றையும் விதந்தோதி வற்புறுத்திய புலவர், மக்கள், பார்ப்பார் ஓதுதல் ஒன்றே அறம்; களவு ஒன்றே அறமல்லது என்று எண்ணிவிடுவரோ என அஞ்சினார்போலும் மக்காள் ! அவ்வாறு எண்ணிவிடன்மின் ! பார்ப்பார் ஓதுதல்போலும் அறங்கள் பல உள; அவையெல்லாம் நின்று நிலைபெறுக! களவுபோலும் அறமல்லனவும் பல உள; அவையெல்லாம் ஒழிக! என்று கூறி வற்புறுத்துவான் விரும்பி, “அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!” “நன்று பெரிது சிறக்க ! தீதில் லாகுக!” என்றெல்லாம் கூறியுள்ளார்.

நாடு, மழை பெற்று வளம் மிகுதற்கும், பகையற்றுப் பெருமையுறுதற்கும், ஒழுக்கம் நிறைந்து உள்நாட்டுக் குழப்பம் குன்றுதற்கும் உறுதுணைபுரிவது அந்நாட்டு நல்லாட்சியே, நல்லாட்சியற்ற நாட்டில் மேற்கூறிய மாண்புகள் நின்று நிலைபெறாது, குன்றி நிலைகுலையும். “அந்தணர் நூற்கும், அறத்திற்கும் ஆதியாய், கின்றது மன்னவன் கோல்”, “ஆபயன் குன்றும்; அறுதொழிலோர் நூல் மறப்பர், காவலன் காவான் எனின்,” “இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் காட்ட பெயலும் விளையுளும் தொக்கு,” “முறைகோடி மன்னவன் செய்யின் உறை கோடி, ஒல்லாது வானம் பெயல்” என்று வள்ளுவர்