பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

அதியன் விண்ணத்தனார்


"விழையா உள்ளம் விழையு மாயினும், என்றும், கேட்டவை தோட்டியாக, மீட்டு, ஆங்கு அறனும் பொருளும் வழாமை நாடித் தற்றக வுடைமை நோக்கி, மற்றதன் பின்னா கும்மே முன்னியது முடித்தல்; அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால் அரிய பெரியோர்த் தெரியுங் காலை நூம்மோர் அன்னோர் மாட்டும், இன்ன பொய்யொடு மிடைந்தவை தோன்றின் மெய்யாண் டுளதோஇவ் வுலகத் தானே.‘’ (அகம் :௨௮சு)

வீரன் ஒருவன், தன்னை எதிர்த்துவந்த களிற்றை எறிந்தமையால் கோணிய தன் வாளை, வீழ்ந்த களிற்றின் மருப்பிடை வைத்துக் கோணலைப் போக்கிச் செம்மை செய்து நிமிர்ந்து நோக்கினானாக, அவன் நிலைகண்ட பகைவர் பெரும்படை பயந்து பின்னிட்டது; வாளேந்தி நிற்கும் அவன், புறங்காட்டும் பகைவர் நிலைகண்டு பெரு நகை கொண்டான் எனக் கூறும் ஒரம்போகியார் பாண் பாட்டு, பழந்தமிழ் மறவர்தம் பண்பாட்டினைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

"தமியன் வந்த மூதி லாளன்
அருஞ்சமம் தாங்கி, முன்னின்று எறிந்த
ஒருகை இரும்பினத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய்வாள் திருத்தாத்
தனக்கு இரிந்தானைப் பெயர்புறம் நகுமே.‘’
(புறம்:௨௮௪)