பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கங்தரத்தனார்

161


"தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாம் அறிந்து உணர்க என்ப மாதோ!'
"குறிஞ்சி கல்லூர்ப் பெண்டிர்

இன்னும் ஒவார் என் திறத்து அலரே.”
(நற்:௧௧௪)

காவியப் புலமையுற்ற நம் புலவர், ஓவியப் புலமையும் உற்றவராவர்; ஒவியத்தின் உயர்வுகண்டு போற்றும் உள்ளம் உடையவராவர்; ஒருவர் ஒருவினை செய்ய, செய்த அவ்வினையைப் பலரும் கண்டு பாராட்டிப் புகழின் அவ் வினையினைச் செய்தாரின் சிந்தையெலாம் மகிழும்; செய்கின்ற வினை ஒவ்வொன்றும் அத்தகைய சிறப்புடையதாதல் வேண்டும்; ஒருவன் ஒரு ஓவியம் புனைந்தான்; ஒவியத்தில் சென்ற உள்ளமுடையார் பலர் ஒன்று கூடினர்; 'அம்மம்ம! என்ன அழகு! எத்துணைச் சிறப்பு! ' எனப் பாராட்டினர் அவ் வோவியத்தை! அதுவே, உண்மையில் உயிர் ஒவியம்; பழந்தமிழர் கண்டு பாராட்டிய அவ்வோவியத்தினையும், அவ் வோவியத்தின வரைந்த ஒவியம் வல்லானையும், தம்பாட்டிடை வரைந்து கர்ட்டி, நம் பாராட்டினைப் பெற்றுவிட்டார் நம்புலவர் :

"அருளிக் கூடும் ஆர்வமாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்

எழுதி யன்ன காண் டகு வனப்பு".
(கற்: கசசு)

வேந்தர்கள் வெண்கொற்றக் குடையுடையவராவர்; அவர்கள் குடைகொண்டிருப்பது, மழை, வெய்யில், பனி, ஆகியவற்றினின்றும் தம்மைக் காத்துக் கொள்வதற் கன்று; தம் அரசின்கீழ் வாழும் மக்கள், பெருமரநிழலில் பெரிதும் மகிழ்ந்து உறைவதேபேர்ல், நிறைவளம்பெற்று, பேரின்பம் உற்று நெடிதுவாழி நின்று துணைபுரியவேயாம்; ஆகவே, குடைகொள்ளும் வேந்தர், செங்கோலினராதல் வேண்டும்; கொடுங்கோலினர், குடை கொள்வதிற் பயன் இல்லை; குடை கொண்டமையினாலேயே, அவர்கள் ஆட்சி நல்லாட்சி ஆகிவிடாது குடையும், குடியோம்பும் கொள்கையுடைய முடி மன்னரிடத்து நின்றவழியே நீள்புகழ் பெறும். இந்த அரசியல் உண்மையை உணர்ந்து கூறியுள்ளார் புலவர்

அ. வி. 11