பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

அதியன் விண்ணத்தனார்

“கடனறி மன்னர் குடை நிழல் போலப்

பெருந்தண் என்ற மரநிழல்” (நற் : ௧௪௬)

புலவர் மேற்கொண்ட மற்றோர் உவமையும், மகிழ்ந்து பாராட்டும் மாண்புற்றுத் திகழ்கிறது ; தலைவன் விரைந்து வந்து வரைந்து கொள்ளாமையால், அவன் நட்பினை இழந்து விட்டதாகக் கருதினாள் ஒரு தலைவி ; அவன் அவளைக் கண்டே நாட்கள் பல ஆகிவிட்டன; ஆகவே அவன் தொடர்பு என்றோ அறுந்து விட்டது; அதைத் தன்னால் மீண்டும் பெறுவதும் இயலாது என உணர்ந்தாள் ; உணர்ந்த அவள் தன்தோழிபால், மலையின் உச்சியில் ஒரு பலாமரம்; அதில் ஒரு பெரும் பழம்; நன்கு பழுத்து விட்டது; அதைப் பேணிப்பறித்துச் செல்வார் இலராயினர்; அது மேலும் மேலும் பழுத்துக்கொண்டே வந்தது ; கடைசியில் ஒருநாள், காம்பற்று வீழ்ந்துவிட்டது. வீழ்ந்த இடமோ, ஆழ்ந்து அடர்ந்த மலைப்பிளவு ; ஆங்கு வீழ்ந்த அப்பழத்தினை எவ்வாறு பெறுதல் இயலாதோ, அவ்வாறே, விட்டுப்போன தலைவன் நட்பினையும் மீட்டும் பெறுதல் இயலாது எனக் கூறினாள் என்ற அவர் கூற்றில் அவர் உவமைகிடந்து அழகு தருவது காண்க.

“மலைகெழு நாடன் கேண்மை, பலவின்
மாச்சினை துறந்த கோள்முதிர் பெரும்பழம்
விடாளை வீழ்ந்துக் காங்குத் தொடர்பறச்

சேணும் சென்றுக் கன்றே ” (நற்: ௧௧௬)