பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௫௫. கயத்தூர்க்கிழான்

கயத்துார், சோழநாட்டின்கண் உள்ளதோர் ஊர் ;அவ்வூரினராய இவர், அரசரான் நன்குமதிக்கப்பெற்று, அவர் அளித்த கிழார்ப்பட்டம் பெற்ற பெரியாராவர் : எட்டுத்தொகை நூல்களுள், குறுந்தொகைக்கண் இவர் பாடிய பாட்டொன்று காணப்படுகிறது.

தலைவன் ஒருவன்பால், பரத்தையர்த் தொடர்பாய தகாவொழுக்கம் எவ்வாறோ இடம்பெற்றுவிட்டது; அது கண்டு பொறாது அழும் அவன் மனைவியின் நிலைகண்டு மனங்கலங்கி வாழ்ந்தாள் அவள் தோழி , ஒருநாள், பரத்தை வீடுசென்ற தலைவன் தன் மனை வந்துசேர்ந்தான்; தலைவன்பால் நிகழ்ந்த தகாவொழுக்கத்தினை எடுத்துக் காட்டித் திருத்த எண்ணினாள் தோழி; அவனை அணுகினாள், 'ஐய! தண்ணிதாய் ஆடுதற்கினிமைதரும் எனக்கருதி நீராட எண்ணுகின்றோம்; ஆனால், அந்நீராடலை நெடிது நேரம் மேற்கொள்ளின், கண்ணும் சிவக்கும்; கருத்தும் சோரும்: இனிமையிற் சிறந்தது தேன்; ஆனால், அத்தேனே அளவின்றி உண்ணின், அங்நிலையில், அது இனிமை தருதற்கு மாறாகப் புளிச்சுவையுடையதுபோல் தோன்றி வெறுக்கச்செய்யும். பழகப்பழகப் பாலும் புளிக்கும்; அளவிற்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாம்; இது உலகியல்; நீ, எம்மோடு நெடுங்காலம் பழகிவிட்டளை; இதனால், நினக்கு எம்பால் வெறுப்புத்தோன்றல் இயல்பே; இது நின் தவறன்று காலம் செய்யும் கருமம், ஆகவே, நின் பரத்தையரொழுக்கம் கண்டு யாம் வருந்துகின்றேமல்லேம் , ஆனால், நின்னை ஒன்று வேண்டுகின்றோம்; எம்மை விட்டுப் பிரியுங்கால், எம்மை எம் தந்தையின் இல்லிடத்தே கொண்டு சென்று விட்டுச் செல்ல வேண்டுகின்றோம்; ஆண்டு. எம் துயரினை மறக்கச்செய்யவல்ல, மனங்கவர் பொய்கை போலும் இயற்கைக்காட்சிகள் எண்ணில உள; அன்று பாம்பால் வந்த பெருந்துயர் போக்கிப் பேணிய பேரன்