பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164,

அதியன் விண்ணத்தனார்

புடைய நினக்கு, இன்று இவ்வேண்டுகோளை ஏற்றுக் கோடல் இயலாததொன்றன்று” என்று கூறினாள்.

கணவனும், மனைவியுமாகிக் காதல் வாழ்வு வாழ்தல், ‘’அறவோர்க் களித்தல், அந்தணர் ஒம்பல், துறவோர்க் கெதிர்தல், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர்கோடல்" ஆய இவற்றை இனிது ஆற்றுதற்கே ஆம்; இவற்றை இருவரும் கூடியிருந்தே ஆம் ஆறுதல் இயலும், ஒருவரை இன்றி, ஒருவர் ஆற்றுதல் இயலாது; அந்நிலையில், இல்லறத்தே ஒருவர் தனித்து வாழ்வதால் பயன் இன்றாம்; பயன் இன்றி ஆண்டு வாழ்வதினும், அவ்விடத்தின் நீங்கி, வேறிடம் சென்று வாழ்தலே நன்றாம்; இதை உணர்ந்தவள் தோழி; தலைவனும் இதை உணர்வான்; தலைவனின் தகாவொழுக்கினைப் போக்குதல் வேண்டின், அவன் ஒழுக்கத்தால், அவன் இல்லறக்கடன் அழிகிறது என்பதை அவனை உணருமாறு செய்தல் வேண்டும் என்பதை உட்கொண்டே ‘’ஐய! நீ பிரிந்த பின்னர் ஈண்டு வாழ்வதால் பயனில்லை; ஆகவே, எம்மை, எம் தந்தைபால் அனுப்பிவிடுக!' என்று கூறினாள்.

கடனறி உள்ளமுடைய தோழியின் அறிவெல்லாம். புலப்படுமாறு அழகிய பாட்டொன்று பாடி, அதன்வழியே தம் அறிவின் பெருமையினை உலகுணரச் செய்துள்ளார்: புலவர்,


‘’நீர்நீ டாடின் கண்ணும் சிவக்கும்;
ஆர்ங்தோர் வாயில் தேனும் புளிக்கும்;.
தணந்தனை யாயின்எம் இல்லுய்த்துக் கொடுமோ!
அந்தண் பொய்கை எங்தை எம்மூர்க்
கடும் பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கஞர் எவ்வம் களைந்த எம்மே." (குறுங் : ௩௫௪)

தந்தைவிடு செல்ல விரும்புவது, ஆண்டுச்சென்று, அவனை மறந்து இன்புற்று றுவாழ்தற்கன்று; அவனையின்றி