பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரும்பிள்ளைப்பூதனார்

167

தம் பாட்டின்கண், புலவ்ர் தாம்வாழ் காலத்திய தமிழகத்தின் தனிச் சிறப்பினைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

தமிழர்கள் குதிரை, யானை, கோவேறு கழுதை, எருதும் குதிரையும் பூண்ட வண்டி, சிவிகை ஆய பல்வேறு ஊர்திகள் கொண்ட பெருவாழ்வினராவர் என்று கூறியுள்ளார். 'புகவரும் பொங்குளைப் புள்ளியன் மாவும், மிகவரினும் மீதினிய வேழப் பிணவும், அகவரும் பாண்டியும், அத்திரியும், ஆய்மாச், சகடமும், தண்டார் சிவிகையும் பண்ணி.” .

உலகின் எப்பகுதிக்கும் சென்று. ஏற்றிச்சென்ற பண்டங்களைக் கொடுத்து, ஆண்டுள்ள பொருள் கொண்டு இடையூறின்றி இனிது வந்து கரைசேர வல்ல கணக்கற்ற நாவாய்களை உடையவர் தமிழர் என்றும் கூறியுள்ளார். “தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரைசேரும் ஏமுறு நாவாய் வாவெதிர் கொள்வார்." கடல் வாணிபம் மேற்.கொண்ட தமிழர், கடலிடையே தாம் ஏறிச்செல்லும் நாவாய், பாயும் கயிறும், மரக்கூட்டமும் பாழ்பட அழிவுறும் நிலைவந்த அக்காலை, அழிவுறாவண்ணம் காக்கவல்ல. அறிவுடைப் பெருமகனையே கப்பலோட்டியாகக் கொள்ளுதல் வேண்டும் என்ற உணர்வுடையராவர் என்பதையும் உணர்த்தியுள்ளார்; "இதையும், கயிறும், பிணையும் இரியச், சிதையும் கலத்தைப்பயினால் திருத்தும், திசையறி நீகான்.”

"ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல்" என்ப ஆதலின், சயென இரத்தல் இழிவுடைத்து அவ்வாறு உறும் இழிவையும் எண்ணாது வந்து இரப்பார்க்குக் கரவாது உவந்தீதல் வேண்டும்; ஈதலையும், அவர் ஈ என இரத்தற்கு முன்னரே, "கொள் எனக் குறிப்பறிந்து கொடுத்தல் வேண்டும். இரத்தல், ஈதல் ஆய இவ் விருவேறு பண்புகளையும் உணர்ந்து பாடியுள்ளார் புலவர். இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன், நல்லது வெஃகி வினைசெய்வார்.