பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

அதியன் விண்ணத்தனார்

“அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் என்னுடையரேனும் இலர்” என்ப. ஆக்க அழிவுகளுக்குக் காரணமாவன, அறிவு உண்மை இன்மைகளே . ஆம்; நல்லறிவு வாய்க்கப்பெற்றார், பல்வளமும் உற்று நல்வாழ்வு வாழ்வர்; அவ்வறிவு திரிந்தார், பெற்றுள பல வளமும் இழந்து பாழுறுவர்; ஆகவே, எல்லாவற்றிற்கும் அடிப்படையாயது பிறழாப் பேரறிவே. புலவர் கீரந்தையார், இவ்வுண்மையினை உள்ளவாறு உணர்ந்தவர்; ஆண்டவனை நெஞ்சார நினைந்தும், வாயார வாழ்த்தியும், தாளிற்றலையுற வணங்கியும் வழிபடும் அவர், தம் வழிபாட்டிற்குப் பயனாகச் சென்றவிடத்தால் செலவிடா, தீதொரீஇ, நன்றின்பால் உய்க்கும் நல்லறிவு ஒன்றனை மட்டுமே வேண்டி நின்றார்.

“நின்னடி,
தலையுற வணங்கினேம்; பன்மாண் யாமும்
கலியில் நெஞ்சினேம் ஏத்தினேம்; வாழ்த்தினேம்;
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்
கொடும்பா டறியற்க எம் அறிவு எனவே.”

(பரிபாடல், உ: எங - எசு)

முற்றும்.