பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௬௬. கீரந்தையார்

“ஓங்கு பரிபாடல்” என உயர்ந்தோரர்ன் பாராட்டப் பெறும் பரிபாடலின் இரண்டாம் பாடலாகிய திருமால் வாழ்த்தினேப் பாடிய புலவர் நம் கீரந்தையானாவர். கீரந்தையார், கீரன் என்பாரின் தந்தையாராவர். திருவள்ளுவமாலை பாடிய புலவர்களுள் இவரும் ஒருவராவுள் எனப் பாராட்டப்பெறும் பெருமைவாய்ந்தாருள் கீரந்தையாரும் ஒருவர். பொற்கைப்பாண்டியன் காவற்சிறப்பும், தன் கற்புச்சிறப்பும் ஒருங்கே தோன்ற விளங்கியாளொரு விழுமிய மகளான்ர மனேவியாக்கொண்ட மாண்புடைக் கீரந்தையாரொருவர் வரலாறு சிலப்பதிகாரத்தே கூறப்பட்டுளது. அவரும், நம்புலவரும் ஒருவரோ, வேறோ தெரியவில்லை.

புலவர் பாடிய பரிபாடல், மண், நீர், தீ, வளி, வான் என்ற ஐம்பூத ஊழிகளின் தோற்ற ஒடுக்கங்களையும், நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் எனத் தமிழர் அறிந்த பேரெண்களின் பெயர்களையும், திருமால் மேற்கொண்ட் பலதேவ, கண்ண, வராக, மோகினி அவதாரப் பெருமைகளேயும், அவன் வேள்வியொடு கொள்ளும் உறவினையும் நன்கு எடுத்துக் கூறியுள்ளது.

திருமால் உடல் ஒளி, நீலத்திருமணியின் பேரொளியாம்; அவன் கண்கள் இரண்டாக இணேந்து மலர்ந்த தாமரை ம்லர்களாம்; அவன் வாய்மை, தப்பாது வரும் நாளாம்; அவன் பொறுமை, நிலமாம்; அவன் அருள், நீர்நிறை மேகமாம் எனக் கூறும் உவமைகளும், அவ்வுவமைகளே எடுத்தாண்ட திறமும் புலவர்தம் புலமைக்கு வாழ்த்துக்கூறும் வன்மையவாம்:

“கின்னது திகழொளி, சிறப்பிருள் திருமணி
கண்ணே, புகழ்சால் தாமரை அலர்இணேப் பிணையல்;
வாய்மை வயங்கிய வைகல்; சிறந்த
நோன்மை நாடின், இருகிலம்; யாவர்க்கும்
சாயல் கினது வான் கிறை.”

(பரிபாடல், உ : ௫௨- ௪)