பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்

25

ஆண்மகன் ஒருவன், தன் மனைவியைப் புகழுங்கால், தன் மனைநோக்கி வரிசைவரிசையாக ஓயாது வரும் விருந்தினரைப் பேணுவதில் பகற்காலம் எல்லாம் கழித்துப், பின்னர் நீராடித், தலைபுனைந்து அதில் மணநாறும் தாழை மலர்சூடி, உள்ள மகிழ்ச்சியை உணரத்தோற்றும் புன்னகையுடையளாய், பள்ளியுட் புகுந்து, இருவர்க்கும் நன்மை தரும் சொல்லாடல் மேற்கொண்டு மகிழ்வள் என அவள் மாண்புரைத்தான் எனப் பாடி, மகளிர் மனையறம் ஓம்பும் மாண்பு இஃது என உணர்த்திய புலவர்க்கு உலகம் நன்றறி உள்ளம் உடையதாகுக.

“விருந்து ஒழிவு அறியாப் பெருங்தண் பந்தர்
வருந்தி வருநர் ஓம்பித், தண்ணெனத்
தாதுதுகள் உதிர்த்த தாழையம் கூந்தல்
வீழிதழ் அலரி மெல்லகம் சேர்த்தி,
மகிழணி முறுவல் மாண்ட சேக்கை
நம்மொடு நன்மொழி நவிலும்

பொம்மல் ஓதிப் புனேயிழை குணனே.” (அகம் : ௩௫௩)

ஆண் மகன் ஒருவன், தன் இல்லறம் இனிது நடைபெறுதற்குப் பெரும்பொருள் வேண்டும் ; அப்பொருள், ஓடித்தேடுவார்க்கல்லது உறங்கி இருப்பார்க்குக் கிட்டாது ; ஆகவே பிறநாடு புகுந்து பொருள் சேர்த்தல் வேண்டும் என்று எண்ணினான்; ஆனால், அவன் தலைவியோடு கூடி வாழும் வாழ்க்கையால் உண்டாம் இன்பம் எளிதில் பெறக்கூடியதன்று ; கிடைத்தற்கரிய அவ்வின்பத்தை இளமைக் காலத்திலேயே நுகர்தல் வேண்டும் ; ஆண்டு முதிர்ந்த வழி, அஃது இன்பம் தருவது இல்லை இளமை இறவாது நிற்குமோ எனின், அது கனவில் தோன்றிய காட்சி, தோன்றிய அக்கணமே மறைந்து போவது போல, வாழ்நாள், கெருநல் இன்பம் இன்று இல்லை என்று கூறுமாறு விரைவில் கழியும் இயல்புடையதாகும்; இளமை எத்துணை விரைவாகக் கழிகிறதோ, அத்துணை விரைவாக முதுமை வந்தெய்தும் என்ற அறிவும் உடையவன் ; ஆகவே, பொருள் வேண்டிப் பிரி-