பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அதியன் விண்ணத்தனார்

தல் வேண்டும் தன் உள்ளத்திற்கு, “நெஞ்சே! இந்த உண்மைகளே இப்போது நீ உணராய்; பிரிந்து சென்று, கடத்தற்கரிய கொடுவழியில் நின்று, தலைவியின் மாண்புகளை நினைந்து தடுமாறுவாய்; ஆகவே எதையுந் துணிந்து மேற்கொள் என்று” கூறினான்; ஆனால் அவன் உள்ளம் வினைமேற்கொண்டு செல்வதே நன்று என்பதை உலகியலானும், அறிவு நூலானும் விளங்க உரைத்தது ; அது கேட்ட அவனும், மனைக்குரிய மாண்புகளானும், கற்பாலும் அழகாலும் சிறந்த மனையாளைப் பிரிந்து பொருள் தேடப் புறப்பட்டுவிட்டான்; காவதம் பல கடந்து கடத்தற்கரிய காட்டு வழியில் சிறிது இருந்தான்; அந்நிலையில், அவனைப் பொருள் தேடத் தூண்டிய அவன் உள்ளம், மனையில் தனித்து உறையும் தன் மனையாளை நினைந்து வருந்தலாயிற்று; மேலே செல்லுதலொழிந்து மீண்டு மனை புகவும் எண்ணலாயிற்று. “ஆண்டு யான் கூறியனவற்றைக் கொண்டு பிரியாதிருந்திருத்தல் வேண்டும்; பிரிந்து இத்துணை நெடுந்ததூரம் வந்து திரும்புவையாயின் உலகத்தார். நின்னைக் கண்டு நகைப்பர்; எண்ணித் துணியாதவன் ; எண்ணிய எண்ணியாங்கு இயற்றும் திண்மை இல்லாதவன் என என்னையும் பழிக்கும்; ஆகவே நின் எண்ணம் ஒழிக,” என்று அவ்வுள்ளத்திற்கு அறிவுரை கூறினான்.

இந்நிகழ்ச்சிகளை இரு செய்யுள் வழியாக விளக்கும் ஆசிரியர் அம்மள்ளனார், பொருட் சிறப்பும், இல்லற மாண்பும், நாளும் இளமையும் நில்லாப் பண்பும், அஞ்சுவது அஞ்சல் அறிவுடைமையாமாறும் இவ்வுலகத்தார் உணர்ந்து உயர்வு பெறுதல்வேண்டும்’ என்ற உணர்வினராவர்; அவர் உணர்த்தும் இவ்வறிவு நெறியினை, அவர் காட்டும் தலைமகன் வழி நின்று உணர்ந்து உலகமும் உயர்வு பெறுமாக.

“ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும்,
கேளினி வாழிய! நெஞ்சே! நாளும்
கனவுக் கழிந்தனைய வாகி நனவின்

நாளது செலவும், மூப்பினது வரவும்,