பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் நல்லந்துவனார்

29

யானும் (நெய்தற்கலி ; ௨௫ : உரை), “நல்லந்துவன் நெய்தல்” என்ற தொடரானும், கீழ்வரும் வெண்பாவானும் இனிது விளங்கும்:

“நாடும் பொருள்சான்ற நல்லந் துவனாசான்
சூடு பிறைச் சொக்கன் துணைப்புலவோர்— தேடுவார்
கூட்டுணவே வாழ்த்தோடு கொங்காங் கலியினையே

கூட்டினான் ஞாலத்தோர்க்கு.”

நெய்தற்றிணை தழுவிவந்த கலிப்பாக்கள் முப்பத்து மூன்றுடன், வையை வெள்ளப் பெருக்கினை விளக்கும் மூன்று பரிபாடலும், முருகனைப் போற்றும் பரிபாடல் ஒன்றும், நற்றிணை, நெடுந்தொகை இவற்றில் ஒவ்வோர் அகவலும் இவர் பாடியனவாக நமக்குக் கிடைத்துள்ளன.

ஆசிரியர் நல்லந்துவனார், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் என அழைக்கப் பெறுதலானும், பாண்டி நாட்டுப் பேராறாகிய வையையையும், அந்நாட்டுச் சிறப்புடைய குன்றுகளுள் ஒன்றாய திருப்பரங்குன்றையும் பாடியுள்ளமையானும், இவர் மதுரையில் வாழ்ந்தவர் என்பது பெறப்படும். இவர் அரசர் எவரையும் பாராட்டினாரல்லர். ஆயினும், “பாண்டியனோடு உறவு கொண்டு, அவன் உள்ளம் தெளியச் செய்த தேயத்தார் இன்புற்று வாழ்தலே போல்” - “தென்னவன் - தெளிந்த தேஎம் போல இன்னகை எய்தினன்” — (கலி: ௧௪௨) என்று பாண்டிய அரசரை மட்டும் பாராட்டியிருத்தலையும் காண்க. ஆகிரியர் நல்லந்துவனார், அரசர் எவரையும் பாடினாரல்ல ரெனினும், அவர் அக்கால நிகழ்ச்சிகள், மக்கள் மனநிலை, அவர் வாழ்வியல் ஆகியவற்றை விளங்கப் பாடியுள்ளார். அவர் பாக்கள் காட்டும் புலமை நலமும், அவை இடையிடையே உணர்த்தும் அறநெறிகளும், அவர் ஆசிரியர் என அழைக்கப்பெறுதற்கு முழு உரிமையும் பெற்றவராவர் என்பதைத் தெற்றென உணர்த்திநிற்கும்.

ஆறு அங்கம் உணர்ந்தவர் அந்தணர்; அவர்க்கு அருமறை அளித்தவன் சிவன்; அவன் கங்கையைச் சடையில்