பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அதியன் விண்ணத்தனார்

வேற்றாசன் ஒருவன் வந்து, அவர் துயரை ஒருவாறு போக்கி ஆள்வதேபோல், திங்கள் தோன்றி, இருளைச் சிறிதே போக்கிற்று; அரசிழந்திருந்த அவ் இடைப்பட்ட காலம், அக் நாட்டு மக்களுக்கு ஆற்றெணாத் துயர் அளித்தல்போன்று, ஞாயிறு மறைவிற்குப் பிற்பட்டதும், திங்கள் தோற்றத்திற்கு முற்பட்டதுமாய மாலைக்காலம், கணவரைப் பிரிந்தார்க்குப் பெருந்துயர் அளித்தது, எனக் கூறியுள்ளார்:

“வெல்புகழ் மன்னவன், விளக்கிய ஒழுக்கத்தால்
கல்லாற்றின் உயிர்காத்து, நடுக்கறத் தான்செய்த
தொல்வினைப் பயன்துய்ப்பத் துறக்கம்வேட் டெழுந்தாற்
போல்
பல்கதிர் ஞாயிறு பகலாற்றி மலைசேர
ஆனாது கலுழ்கொண்ட உலகத்து மற்றவன்
ஏனையான் அளிப்பான்போல் இகல்இருள் மதிசிப்பக்
குடைநிழல் ஆண்டாற்கும், ஆளிய வருவாற்கும்

இடைநின்ற காலம்போல் இறுத்தந்த மருண் மாலை.”

(நெய்தற்கவி : க)


தலைவன் பிரிந்து இருந்தமையால் வருந்தி மெலிவுற்ற தலைமகள், ஆற்றும் தலைமகன் அண்மையில் இல்லாமையால் தளர்வுற்றாள் என அறிந்துவந்து வருத்திய மாலைக் காலம், அத் தலைமகன் வந்து சேர்ந்தானாதல் அறிந்து, அவளை வருத்துவதொழித்து இரவினுள் சென்று ஒளித்துக்கொண்ட நிகழ்ச்சி, படைவன்மையில்லா அரசன் ஒருவன் ஆளும் நாடு. பாதுகாப்பற்றது என அறிந்த மற்றோர் அரசன், அந் நாட்டுள் புகுந்து, அந்நாட்டார்க்குப் பெருந்துன்பம் தந்து ஆண்டிருப்புழி, அப் பகை போக்கி ஆளும் ஆற்றல் உடைய அறநெறி அரசன் ஒருவன் வரக் கண்டு, அந்நாட்டைவிட்டு ஓடி ஒளிந்த கிகழ்ச்சியோடு ஒப்புடைத்தாம் என்று கூறுவதையும் காண்க:

“இடனின்று அலைத்தரும் இன்ன செய்மாலை,
துனிகொள் துயர்திரக் காதலர் துனைதர,
மெல்லியான் பருவத்து மேனின்ற கடும்பகை
ஒல்லென நீக்கி, ஒருவரது காத்தோம்பும்
நல்லிறை தோன்றக் கெட்டாங்கு

இல்லா கின்றால் இருளகத் தொளித்தே.”

(நெய்தற்கலி :ஙு)