பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் நல்லந்துவனார்

33


ஞாயிறு, பகற்காலமெல்லாம் உலகத்து உயிர்கள் ஒளிபெற்று உய்யுமாறு வீசிய தன் கதிர்களையெல்லாம் மடக்கிக்கொண்டு மலையிடையே மறைந்தானாக, அவை அவன் ஒளியால் தாம்பெற்ற இன்பமெல்லாம் இழந்து, துன்புறுமாறு இருள்வந்து சேரும் நிகழ்ச்சியை, அறநெறி நின்று உலகாண்ட அரசன் மறைந்தானாக, அவன் ஆட்சியால், தாம் பெற்ற மகிழ்ச்சியெல்லாம் இழந்து உலகத்தார் உறுதுயர் உறுமாறு, அறநெறி அறியாக் குறுநில மன்னன் அவ் வுலக ஆட்சியை அடைவதுபோலும் என்று கூறும் உவமையினையும் உணர்க.

“எல்உறு தெறுகதிர் மடங்கித் தன் கதிர் மாய,
நல்லற நெறிநிறீஇ உலகாண்ட அரசன்பின்
அல்லது மலைந்திருந்து அறநெறி நிறுக்கல்லா

மெல்லியான் பருவம்போல் மயங்கிருள் தலைவர.”
(நெய்தற்கலி: கஉ)

ஆசிரியர் நல்லந்துவனார், அக்கால அரசியல் நிலையோடு, மக்கள் வாழ்க்கை நிலையினையும் விளங்க உணர்ந்தவராவர். அவர் பாடிய பரிபாடல் நான்கும், அக் கால மக்கள் வாழ்வியலை நன்கு உணர்த்துவனவாம். ஆற்றில் புதுப்புனல் வருங்காலத்திலும், அந்நீர் தெளிந்து ஓடும் தைத்திங்கள் காலத்திலும், அதில் மக்கள் ஆடிமகிழ்தல் அக்கால வழக்கமாம். பாண்டிநாட்டு மக்கள், தங்கள் நாட்டில் ஒடிய வையையாற்று வெள்ளத்தில், விரும்பியாடிய ஆட்டங்களைப் புலவர் நன்கு விரித்து உரைத்துள்ளார்.

வையை, புலவர் பாராட்டும் புகழுடையது என்ப; “சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி, இருநிலம், தார் முற்றி யதுபோலத் தகைபூத்த வையை” (கலி: சுஎ), “புலவர் காவிற் பொருந்திய பூங்கொடி, வையை என்ற பொய்யாக் குலக்கொடி” (சிலம்பு: க.க.) எனப் புலவர்கள் அதைப் போற்றுவது காண்க. வையையின் இச்சிறப் புணர்ந்த புலவர், அது புலவர் பாராட்டும் இப் புகழ்

அ.வி. -3

அ.வி. -3