பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் நல்லந்துவனார்

37

பனி மிக்க விடியற்காலத்தே படிந்து நீராடினர்; அங்கனம் ஆடிய அவர்கள், வாடை விசுவதால், குளிர் பொறுத்தல் இலராயினர் . அவ்வாறு வருத்துவரர் தம் குளிர்போக்க, ஆற்றின் கரைக்கண் அந்தணர் ஒம்பிய செந்தழல் சிறந்த துணைபுரிந்தது,” என்றும் அவ்வாறு ஆடிய மகளிர், தம் நோன்பின் இறுதியில், “தைந்நீரே” யாம் உள்ளம் மேவிய காதலரைப்பெற்று உயர்வோமாக; எம் கணவர், பூவுண்டு துறக்கும் வண்டேபோல், எம் நலன் உண்டு எம்மை மறந்துபோதலைப் புரியாராகுக ! யாமும் எம் கணவரும், இன்றேபோல் என்றும் இளமைச் செவ்வியோடிருப்போமாக!” என்று வேண்டினர் எனவும் அறிவித்துள்ளார்:

“விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப,
வெம்பா தாக வியன்நில வரைப்பு என
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்புலர் பாடிப், பருமணல் அருவியின்
ஊதை ஊர்தர உறைசிறை வேதியர்
தெறிநிமிர் துடங்கழல் பேணிய சிறப்பிற்
றையன் மகளிர் ஈரணி புலர்த்தா. (பரி. கக:எஎ-அசு)


வையை யாற்றின் வனப்பினை விளங்க உரைத்த புலவர், அவ் வையையின் ஒருபால் அமைந்த திருப்பரங்குன்றின் பெருமையினையும் பாராட்டியுள்ளார்; பரங்குன்றையும், அப் றுறை பெருமாயை முருகனையும் பாடிப் பரவியுள்ளார்; பரங்குன்றில், செவ்வேளைக் காணற் பொருட்டுச் சிவன் முதலாம் தேவரெல்லாம் சேரவத்துள்ளமையால் அது, அத்தேவர்கள் ஒருங்கு கூடியிருக்கும் இமயத்தோடு ஒப்புைைடயதாம் என்று பாராட்டுகிறார் : “பரங்குன்று இமயக்குன்றம் நிகர்க்கும்.” அப்பரங்குன்றிற்கும், மதுரைக்கும் இடைப்பட்ட வழியின் அருமையினைப் பாராட்டும் புலவர், அவ்வழி, தும்பியும் வண்டும் சுற்றித் திரிந்து, தேனுண்டு ஆரவாரிக்குமாறு, சுனையில்